கணினி ஆப்பரேட்டருக்கு சம்பளம் வழங்க தலைவர் லஞ்சம் கேட்டதாக புகார்..!
திண்டுக்கல் மாவட்டம் ஆத்துார், அய்யங்கோட்டை ஊராட்சியில் அ.புதுாரை சேர்ந்த மருதவள்ளி கணினி ஆப்பரேட்டராக வேலை பார்த்து வந்துள்ளார். 7 மாதமாக சம்பளம் வழங்காத நிலையில் ஒரு லட்சம் ரூபாய் கொடுத்தால் சம்பளத்திற்கான ஓ.டி.பி., எண்ணிற்கு கையெழுத்து இடுவேன் என ஊராட்சி தலைவர்…
பழனியில் ஒற்றை யானையால் பரபரப்பு …
பழனி அடிவாரப் பகுதியான கணக்கம்பட்டி கோம்பை பட்டி உள்ளிட்ட பகுதிகளில் ஒற்றை யானை உலா வருவதால் விவசாயிகள் அதிர்ச்சியில் உள்ளனர். நேற்று இரவு சேகர் என்பவரின் தோட்டத்தில் மக்காச்சோள பயிரை சாப்பிட்டுக்கொண்டு பல மணி நேரம் நின்ற யானையால் அந்தப் பகுதி…
விடுமுறையை முன்னிட்டு கொடைக்கானலில் குவிந்த சுற்றுலா பயணிகள்
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் தற்போது வெயிலின் தாக்கம் குறைந்த நிலையில் அவ்வப்போது கனமழை பெய்து வருகிறது. கடந்த சில நாட்களாக சாரல் மழையுடன் இதமான சீதோசனம் நிலவி வருகிறது. இன்று விடுமுறை தினம் என்பதால் பல்வேறு பகுதிகளில் இருந்து பள்ளி, கல்லூரி…
பழனி-முத்தமிழ் முருகன் மாநாட்டிற்கு 1,003 ஆய்வுக்கட்டுரைகள் வரப்பெற்றுள்ளன-அமைச்சர் சேகர்பாபு தகவல்
பழனியில் நடைபெறவுள்ள அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாட்டு முன்னேற்பாடு பணிகள் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் அனைத்துல முத்தமிழ் முருகன் மாநாட்டிற்கு வருகைதரும் முருக பக்தர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்களுக்கு ஏற்பாடு செய்யப்படும் தங்குமிடம்…
திண்டுக்கல் ஒருங்கிணைந்த நீதிமன்றம் முன்பு வழக்கறிஞர்கள் உண்ணாவிரதம்
திண்டுக்கல் வழக்கறிஞர்கள் சங்கம் சார்பாக திண்டுக்கல் ஒருங்கிணைந்த நீதிமன்றம் முன்பு வழக்கறிஞர்கள் புதிய முப்பெரும் சட்டங்களை திரும்பப் பெற மத்திய அரசை வலியுறுத்தி உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
திண்டுக்கல்லில் விவசாயிகள் கைது
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே உள்ள கொத்தையம் ஊராட்சிக்கு உட்பட்ட அரளி குத்து குளத்தில் சிப்கோ அமைப்பது தொடர்பாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக விவசாயிகள் மற்றும் பொதுமக்களை காவல்துறையினர் கைது செய்தனர்.
திண்டுக்கல் ரயில் நிலையத்தில் தீபாவளி முன்பதிவு டிக்கெட் பதிவு செய்வதில் ரயில்வே பெண் ஊழியரே மோசடி.
திண்டுக்கல் ரயில்வே நிலையத்தில் தீபாவளி டிக்கெட் முன்பதிவு செய்வதில் ரயில்வேயில் டிக்கெட் புக் செய்யும் பெண் ஊழியரே மோசடியில் ஈடுபட்ட சம்பவம் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. அதிகாலையில் 3 மணியில் இருந்தே பயணச்சீட்டு முன்பதிவு செய்ய ஏராளமானோர் காத்திருந்த நிலையில், கவுண்ட்டர்…
கொடைக்கானலில் சாரல் மலையுடன் ரம்யமான சூழல் – சுற்றுலா பயணிகள் உற்சாகம்…
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் கோடைகாலம் முடிந்த நிலையில் தற்போது அதிகாலை நேரத்தில் பனி மூட்டமும் அதனைத் தொடர்ந்து சாரல் மழையும்,மாலை நேரத்தில் மீண்டும் பனி மூட்டமும் என ரம்யமான சூழல் நிலவி வருகிறது. இன்று விடுமுறை தினம் என்பதால் தமிழகத்தின் பிற…
பண்ணைக்காடு அருகே நடுரோட்டில் எரிந்தது கார், அதிர்ஷ்டவசமாக 6 பேர் உயிர் தப்பினர்
சிதம்பரம் காட்டுமன்னர்கோவிலை சேர்ந்த ஆரிப்புல்லாவிற்கு சொந்தமான காரில் 6 பேர் கொடைக்கானலுக்கு சுற்றுலா வந்தனர். இந்நிலையில் திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் அருகே பண்ணைக்காடு ஊத்து பெட்ரோல் பங்க் அருகே வந்தபோது காரில் புகை வந்தது. தொடர்ந்து தீப்பற்றி எரிந்தது காரில் இருந்த…
கள்ளத்தனமாக மது விற்றால் உடனே சிறந்த தண்டனை… எஸ்.பி பிரதீப் அதிரடி
திண்டுக்கல் மாவட்டத்தில் கள்ளத்தனமாக மது விற்பனையில் ஈடுபடுவோர் மீது வழக்குப்பதிந்து சிறையில் தள்ள எஸ்.பி .,பிரதீப் உத்தரவிட்டுள்ளார் கள்ளக்குறிச்சியில் நடந்த கள்ளச்சாராய இறப்புகளை தொடர்ந்து, திண்டுக்கல் மாவட்டத்தில் ஒன்றியம் வாரியாக குறைந்தது 20 இடங்களில் முக்கிய புள்ளிகள் ,அந்தந்த பகுதி போலீசாரின்…



