அழகு குறிப்புகள்:
முகத்தை பளிச்சென்று மாற்ற பேஷியல் செய்முறை: முதலில் நமது முகத்தை கிளன்சிங் செய்ய வேண்டும். அதாவது நமது முகத்தில் படிந்திருக்கும் அழுக்குகளை நீக்க வேண்டும். அதற்கு மற்ற க்ரீம்களை பயன்படுத்துவதை விட, அதே அளவு ரிசல்ட் தரக்கூடிய ஒரு பொருள் நம்…
மேனி பளபளப்பாக, மிருதுவாக:
தேங்காய் எண்ணெயில், மஞ்சள் தூளை போட்டுக் குழைத்து உடம்பிற்கு தடவி, பயத்தம்மாவை தேய்த்துக் குளித்தால் மேனி பளபளப்பாகவும், மிருதுவாகவும் இருக்கும்
தலைமுடி அடர்த்தியாக வளர சத்தான ஷாம்பூ:
சாதம் வடித்த நீருடன், சுத்தமான சீகைக்காய் தூளைக் கலந்து தலைக்குத் தேய்த்து வாரத்திற்கு இரண்டு முறை குளித்து வந்தால், தலைமுடி அடர்த்தியாகவும், பளபளப்புடனும் வளரும்.
எண்ணெய் பசை உள்ள முகம் பொலிவு பெற:
ஒரு கிண்ணத்தில் கடலை மாவை எடுத்து அதில் தயிர், எலுமிச்சை சாறு ஊற்றி நன்றாக கலந்து முகத்தில் தடவ வேண்டும். சில நிமிடங்கள் ஊற வைத்து வெதுவெதுப்பான நீரில் கழுவினால் எண்ணெய் பசை நீங்கி முகம் பொலிவு பெறும்.
அழகு குறிப்புகள்:
பொலிவான சருமத்திற்கு கோதுமை மாவு 2-3 டேபிள் ஸ்பூன் எடுத்துக்கொள்ளவும். அத்துடன் 1-2 டேபிள் ஸ்பூன் பாலையும் சேர்த்து நன்றாக கலந்து பேஸ்ட்டாக்கி கொள்ளவும். இதை முகத்தில் அப்ளை செய்து 10 நிமிடங்கள் கழித்து வட்ட இயக்கத்தில் தேய்க்கவும். பிறகு சதாரண…
சருமத்தில் இறந்த செல்களை நீக்க..
மாதத்திற்கு ஒருமுறையாவது இறந்த செல்களை நீக்க வேண்டும். பொதுவாக வாரம் ஒருமுறை இறந்த செல்களை நீக்குவது சருமத்திற்கும் முகப்பொலிவிற்கும் மிக நன்மை தரும். நமது சருமத்தின் வகை அறிந்து அதற்கு ஏற்ற வாறு இறந்த செல்களை நீக்குவதுதான் சரியான முறை. இறந்த…
அழகு, இளமையை தக்க வைக்க செம்பருத்திப் பூ டீ:
முதலில் இந்த செம்பருத்திப் பூவை எடுத்து, அதன் காம்பு பகுதி மற்றும் மகரந்த பகுதியை மட்டும் நீக்கி விட்டு, அதன் இதழ்களை தனியாக பிரித்து எடுத்து, தண்ணீரில் சுத்தமாக கழுவிக் கொள்ள வேண்டும். பிறகு ஒரு கிண்ணத்தில் இரண்டு டம்ளர் தண்ணீர்…
தக்காளி பேசியல்:
பழுத்த தக்காளியை நன்கு பசைப்போல விதையுடன் சேர்த்து அரைத்து, முகத்தில் தடவி, 20 முதல் 30 நிமிடங்கள் கழித்து கழுவ வேண்டும். இவ்வாறு செய்து வந்தால் சருமத்தில் உள்ள எண்ணெய் பசை, கருமை நிறம் மறையும்.
சருமம் புத்துணர்ச்சி பெற:
தேங்காய்ப் பாலுடன் ஒரு டீஸ்பூன் தேன் கலந்து முகத்தில் ஐந்து நிமிடம் மசாஜ் செய்தால் சோர்வடைந்த சருமம் புத்துணர்ச்சி பெறும்.