அழகு குறிப்புகள்:
சருமம் பளபளப்பாக:நன்கு பழுத்த பப்பாளிப் பழத்தை சீவி அரைத்து, உடல் முழுவதும் தடவிக் கொள்ளவும். 15 நிமிடம் கழித்து பாசிப்பயறு மாவு போட்டு உடம்பை தேய்த்துக் குளிக்கவும். தினமும் பப்பாளிப் பழம் சாப்பிடவும். வாழைப் பழத் தோலையும் இது போலத் தேய்த்துக்…
கண்கள் பிரகாசமாக இருக்க:
இளம் சூடான ஒரு லிட்டர் நீரில், இரண்டு ஸ்பூன் உப்பைப் போட்டு, கண்களை கழுவினால் கண்கள் பிரகாசமாக இருக்கும்
முகம் பிரகாசிக்க:
தோல் நீக்கிய சிறிது ஆப்பிள் பழத்துண்டுகளை ஒரு கப் பாலில் போட்டு நன்றாக கொதிக்க வைத்திடுங்கள். அது தயிர் போன்று மாறும். அதை நன்றாக ஆற விட்டு, அதில் தேவையான அளவு எடுத்து முகத்தில் பூசி 20 நிமிடங்கள் ஊறவிட்டு பின்…
அழகு குறிப்புகள்:
முக அழகு மற்றும் உடல் பளபளப்பாக: தினமும் பாலில் தேவையான அளவு தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் எந்த நோய்களையும் எதிர்த்து நிற்கும் ஆற்றலை உடல் பெற்று விடும். முகம் அழகாகவும், உடல் பளபளப்பாகவும் இருக்கும்.
அழகு குறிப்புகள்:
முகத்தில் சுருக்கம் இல்லாமல் இருக்க:வெந்தயக் கீரையை பாசிப்பருப்பு, சீரகம் சேர்த்து வேகவைத்து மசித்து வாரத்தில் 2 அல்லது 3 தடவை சாப்பிட்டு வந்தால் உடல் குளுமையாக இருக்கும். சுருக்கம் எட்டியும் பார்க்காது.
அழகு குறிப்புகள்:
முடி கொட்டுவது நிற்க: பெண்களுக்கு முடி கொட்டுவது தீராத பிரச்னையாக உள்ளது. முடி நன்கு வளர வேண்டுமானால், புரோட்டீன் சத்து அதிகம் உள்ள பொருட்களை உணவில் சேர்த்து கொள்ள வேண்டும். இச்சத்து குறைவதால் தான் முடி உதிர்கிறது.உதாரணமாக – மீன், இறைச்சி,…
அழகு குறிப்புகள்:
நகங்களை எளிமையாக கட் பண்ண: சிலருக்கு நகம் கடினத் தன்மையுடன் இருப்பதால், நகத்தை வெட்டுவதற்கு கஷ்டமாக இருக்கும். அப்படிப்பட்டவர்கள் குளித்தவுடன் நகம் வெட்டினால், நகம் ஈரத் தன்மையுடன் இருப்பதால், எளிதாக வெட்ட வரும். அதே போல், தேங்காய் எண்ணெய் தடவி சிறிது…
அழகு குறிப்புகள்:
நகங்கள் உறுதியாக:நகங்கள் உறுதியற்று உடைவதற்கு இரும்பு மற்றும் கால்சியம் போன்ற சத்துக்குறைபாடுகளே காரணம். எனவே நகங்கள் ஆரோக்கியமாக வளர ஊட்டச்சத்து நிறைந்த காய்கறிகள் மற்றும் உணவு வகைகளை சாப்பிட வேண்டும்.
அழகு குறிப்புகள்:
விரல்கள் புத்துணர்ச்சியுடன் இருக்க: தண்ணீரை மிதமாக சூடுபடுத்தி, சிறிது உப்பு கலந்து, அதில் விரல்களை சிறிது நேரம் வைத்திருந்தால், விரல்கள் புத்துணர்ச்சியுடன் காணப்படும்.
அழகு குறிப்புகள்:
வெயிலில் ஏற்படும் கருமை நீங்க: ஆரஞ்சு பழத்தோலை வெயிலில் காயவைத்து பொடி செய்து பாலுடன் கலந்து சருமத்தில் தடவி அரைமணி நேரம் கழித்து கழுவி வந்தால், வெயிலில் ஏற்பட்ட கருமை மறையும்.