

முகம் புத்தொளி பெற:
முகம் கழுவும் கிரீமை (பேஸ் வாஸ் கிரீம்-குயஉந றயளா ஊசநயஅ) முகத்தில் நுரை வரும் அளவிற்கு தேய்த்து பிறகு ஒரு தேக்கரண்டி சர்க்கரையை எடுத்து முகத்தில் மெதுவாக மசாஜ் செய்ய வேண்டும். இதனால் முகத்தில் உள்ள வெண் புள்ளிகள் (வொயிட் ஹெட்ஸ்), கரும் புள்ளிகள் (பிளாக் ஹெட்ஸ்) எல்லாம் நீங்கி விடும். அதோடு முகத்தில் இருக்கும் நுண் துவாரங்களில் அடைத்திருக்கிற அழுக்கும் வெளியேறி முகம் புத்தொளி பெறும்.