• Sat. Oct 12th, 2024

அழகு குறிப்புகள்:

Byவிஷா

Apr 24, 2022

முடி அடர்த்தியாக வளர்வதற்கு:

முதலில் ஒரு சிறிய பாத்திரத்தை எடுத்துக்கொள்ளுங்கள். அதில் 50ml நல்லெண்ணெய் ஊற்றிக் கொள்ளுங்கள். இந்த நல்லெண்ணெயில் நெல்லிக்காய் பொடி – 1/2 ஸ்பூன், கருவேப்பிலை பொடி  1 ஸ்பூன், கருஞ்சீரகம் பொடி – 1/2 ஸ்பூன் போதுமான அளவாக இருக்கும். இந்த மூன்று பொடிகளையும் நல்லெண்ணையில் போட்டு நன்றாக கலந்து விட்டு டபுள் பாய்லிங் மெத்தடில் இந்த நல்லெண்ணெயை சூடு செய்ய வேண்டும்.

அடுப்பில் ஒரு அகலமான பாத்திரத்தை வைத்து, தண்ணீரை ஊற்றி அந்த தண்ணீரை நன்றாக சூடு செய்யுங்கள். தண்ணீர் சூடாகி வந்ததும் கிண்ணத்தில் இருக்கும் நல்லெண்ணையை அந்த சுடு தண்ணீர் மேலே வைத்து, சூடு செய்ய வேண்டும். எண்ணெயானது  சூடாகி லேசாக நுரை கட்டி வரும் வரும் போது அடுப்பை அணைத்து விடுங்கள். இந்த நல்லெண்ணெய்யை எடுத்து சூடாக இருக்கும்போதே வடிகட்டுங்கள். வடிகட்டிய எண்ணெயை நன்றாக ஆற வைத்து விட வேண்டும்..

ஆறிய இந்த எண்ணெயோடு ஒரு முட்டையின் வெள்ளைக் கருவை ஊற்றி நன்றாக அடித்து கலந்தால் தலைக்கு தேவையான நல்லெண்ணெய் ஹேர் ஆயில் தயார். இந்த ஆயிலை முதலில் ஸ்கால்ப்பில் நன்றாக படும்படி வைத்து விட்டு மசாஜ் செய்து கொடுங்கள். அதன் பின்பு முடியின் நீளம் வரை இந்த பேக்கை அப்ளை செய்து கொள்ளுங்கள்.

15 லிருந்து 20 நிமிடங்கள் இந்த பேக் தலையில் அப்படியே இருக்கட்டும். அதன் பின்பு நல்ல ஷாம்பூ அல்லது சீயக்காய் போட்டு தலை குளித்து விடுங்கள். பிறகு உங்களுடைய முடியை சிக்கு எடுத்து சீவி பாருங்கள். உங்களுக்கே தெரியும். மாதத்தில் ஒரு நாள் அல்லது மாதத்தில் 2 நாள் இந்த பேக்கை போட்டு வருவது நல்லது என்பது குறிப்பிடத்தக்கது.

எந்த ஹேர் பேக்கை தலையில் போட்டாலும் முடி உதிர்வு அதிகமாக உள்ளது என்பவர்கள் இந்த ஹேர் பேக்கை ட்ரை பண்ணும்போது முடி உதிர்வு குறைவாக இருக்கும். முடிக்கு தேவையான ஊட்டச்சத்து கிடைத்து வேர்கால்களில் இருந்தே முடி அடர்த்தியாக வளர்வதற்கு இந்த ஹேர் பேக் ரொம்ப ரொம்ப நல்லது. குறிப்பாக இந்த வெயில் காலத்தில் பயப்படாமல் இந்த ஹேர் பேக்கை பயன்படுத்தலாம்.

Related Post

delhi india அரசியல் அரியலூர் அழகு குறிப்பு ஆன்மீகம் இந்த நாள் இராணிப்பேட்டை இராமநாதபுரம் இலக்கியம் இன்றைய ராசி பலன்கள் ஈரோடு உடனடி நியூஸ் அப்டேட் உலகம் கடலூர் கரூர் கல்வி கவிதைகள் கள்ளக்குறிச்சி கன்னியாகுமரி காஞ்சிபுரம் கிருஷ்ணகிரி கோயம்புத்தூர் சமையல் குறிப்பு சிவகங்கை சினிமா சினிமா கேலரி செங்கல்பட்டு சென்னை சேலம் தஞ்சாவூர் தமிழகம் தருமபுரி திண்டுக்கல் திருச்சிராப்பள்ளி திருநெல்வேலி திருப்பத்தூர் திருப்பூர் திருவண்ணாமலை திருவள்ளூர் திருவாரூர் தினம் ஒரு திருக்குறள் தினம் ஒரு விவசாயம் தூத்துக்குடி தெரிந்து கொள்வோம் தென்காசி தொழில்நுட்பம் தேசிய செய்திகள் தேனி நாகப்பட்டினம் நாமக்கல் நீலகிரி படித்ததில் பிடித்தது புகைப்படங்கள் புதுக்கோட்டை பெரம்பலூர் பொது அறிவு – வினாவிடை மக்கள் கருத்து மதுரை மயிலாடுதுறை மருத்துவம் மாவட்டம் லைப்ஸ்டைல் வணிகம் வார இதழ் வானிலை விருதுநகர் விழுப்புரம் விளையாட்டு வீடியோ வேலூர் வேலைவாய்ப்பு செய்திகள் ஜோதிடம் - ராசிபலன்
நீங்க ரெடின்னா நாங்க ரெடி?
delhi india அரசியல் அரியலூர் அழகு குறிப்பு ஆன்மீகம் இந்த நாள் இராணிப்பேட்டை இராமநாதபுரம் இன்றைய ராசி பலன்கள் ஈரோடு உடனடி நியூஸ் அப்டேட் உலகம் கடலூர் கரூர் கல்வி கவிதைகள் கள்ளக்குறிச்சி கன்னியாகுமரி காஞ்சிபுரம் கிருஷ்ணகிரி கோயம்புத்தூர் சமையல் குறிப்பு சிவகங்கை சினிமா சினிமா கேலரி செங்கல்பட்டு சென்னை சேலம் தஞ்சாவூர் தமிழகம் தருமபுரி திண்டுக்கல் திருச்சிராப்பள்ளி திருநெல்வேலி திருப்பத்தூர் திருப்பூர் திருவண்ணாமலை திருவள்ளூர் திருவாரூர் தினம் ஒரு திருக்குறள் தினம் ஒரு விவசாயம் தூத்துக்குடி தெரிந்து கொள்வோம் தென்காசி தொழில்நுட்பம் தேசிய செய்திகள் தேனி நாகப்பட்டினம் நாமக்கல் நீலகிரி படித்ததில் பிடித்தது புகைப்படங்கள் புதுக்கோட்டை பெரம்பலூர் பொது அறிவு – வினாவிடை மக்கள் கருத்து மதுரை மயிலாடுதுறை மருத்துவம் மாவட்டம் லைப்ஸ்டைல் வணிகம் வார இதழ் வானிலை விருதுநகர் விழுப்புரம் விளையாட்டு வீடியோ வேலூர் வேலைவாய்ப்பு செய்திகள் ஜோதிடம் - ராசிபலன்
நீங்க ரெடின்னா.., நாங்க ரெடி?
சரும செல்கள் புத்துணர்ச்சி அடைய:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *