• Mon. Oct 5th, 2026
WhatsAppImage2026-09-24at2158321
previous arrow
next arrow
Read Now

த.வெ.க தொண்டர்கள், ரசிகர்கள் மீது வழக்கு பதிவு..,

ByKalamegam Viswanathan

May 5, 2025

கொடைக்கானலில் நடைபெறும் படப்பிடிப்பில் பங்கேற்பதற்காக கடந்த மே ஒன்றாம் தேதி சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் மதுரை வந்து அடைந்தார். தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் அவரை வரவேற்பதற்காக ஆயிரக்கணக்கான கட்சி தொண்டர்களும் ரசிகர்களும் மதுரை விமான நிலையத்தில் கூடினர்.

இதனால் விமான நிலையத்தில் வைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு தடுப்பு கம்பிகள் சேதம் அடைந்தது. போக்குவரத்து பாதிப்புகள் ஏற்பட்டது. பயணிகள் விமான நிலையத்திற்கு செல்ல கடும் சிரமத்திற்கு உள்ளானார்கள்.

இந்த நிலையில் மதுரை விமான நிலையத்திற்கு வருகை தந்த தமிழக வெற்றி கழகத்தின் தலைவரும் சினிமா நடிகருமான விஜய் அவர்கள் வருகை தந்ததை முன்னிட்டு அவரை வரவேற்கும் பொருட்டு தெற்கு மாவட்ட செயலாளர் வடக்கு மாவட்ட செயலாளர் தங்கப்பாண்டி மற்றும் கல்லணை உட்பட இன்னும் சிலர் தலைமையில் கூடிய கட்சி தொண்டர்கள் மற்றும் ரசிகர்கள் சட்டவிரோதமாக ஒன்று கூடி பொது மக்களின் வாகனங்கள் மற்றும் விமான பயணிகளின் வாகனங்களை செல்லவிடாமல் தடுத்தல்  உள்ளிட்ட 3 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.