• Tue. Dec 10th, 2024

பண மதிப்பிழப்பு நடவடிக்கைக்கு எதிரான வழக்கு: இன்று தீர்ப்பு

ByA.Tamilselvan

Jan 2, 2023

இந்தியா முழுவதும் அமல் படுத்தப்பட்ட பண மிதிப்பிழப்பு நடவடிக்கைக்கு எதிரான வழக்கு நடைபெற்று வந்த நிலையில் சுப்ரீம்கோர்ட் இன்று தீர்ப்பு வழங்குகிறது.
பண மதிப்பிழப்பு நடவடிக்கையை பிரதமர் மோடி, கடந்த 2016-ம் ஆண்டு நவம்பர் 8-ந்தேதி அறிவித்தார். இதன் வாயிலாக, புழக்கத்தில் இருந்த 500, 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாததாக அறிவிக்கப்பட்டன. அதற்கு மாற்றாக, புதிய 500, 2000 ரூபாய் நோட்டுகள் அறிமுகப்படுத்தப்பட்டன. இந்த பண மதிப்பிழப்பு நடவடிக்கைக்கு எதிராக விவேக் நாராயன் சர்மா உள்ளிட்ட 57 பேர் சுப்ரீம் கோர்ட்டில் ரிட் மனுக்கள் தாக்கல் செய்தனர். இந்த வழக்குகளை நீதிபதி அப்துல் நசீர் தலைமையிலான அமர்வு விசாரித்து வருகிறது.
அனைத்து தரப்பு வாதங்களையும் பதிவு செய்து கொண்ட சுப்ரீம் கோர்ட்டு இந்த ரிட் மனுக்கள் மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் கடந்த டிசம்பர் 22-ந்தேதி ஒத்திவைத்தது. இந்த நிலையில் பரபரப்பான இந்த வழக்கில் நீதிபதிகள் பி.ஆர்.கவாய், பி.வி. நாகரத்னா ஆகியோர் (திங்கட்கிழமை) இன்று தீர்ப்பு கூறுகிறார்கள்.