• Wed. Mar 29th, 2023

கார்பன்- திரைவிமர்சனம்

கொஞ்ச காலமாகவே ஆங்கிலப்படங்களை ஆக்கிரமித்திருக்கும் டைம் மெஷின், டைம் லூப் சம்பந்தமான திரைக்கதைகள் தமிழ் சினிமாவை ஆக்கிரமித்து வருகின்றன அதனை புரிந்துகொள்கின்ற சினிமா ரசிகன் இங்கு உண்டா என்கிற கேள்விக்கு
டைம் லூப் அடிப்படையில் தயாரிக்கப்பட்ட மாநாடு படத்தின்வெற்றி பொய்யாக்கிவிட்டது கார்பன் மாநாடு படத்திற்கு முன்பாகவே தயாரித்து முடிக்கப்பட்ட படம் டைம் லூப் என புரியாத வார்த்தை பிரயோகம் செய்யாமல் விதார்த் நடிக்கும் 25வது படமாகவே கார்பன் படத்தின்செய்திகள் வெளியானது பொங்கல் போட்டியில் களமிறங்கியுள்ள கார்பன் திரைக்கதைப்படிநாயகன் காண்கிற கனவு எல்லாம் அப்படியே நடக்கும் என்ற நிலையில் அதை சரி செய்து கொள்ள முயலும் அவரது போராட்டம் தான் கதை.
போலீசாக வேண்டும் என்ற லட்சியக் கனவில் வாழ்ந்து கொண்டிருக்கும் நாயகன் விதார்த்துக்கு குப்பை லாரி ஓட்டும் தந்தையே தாயுமானவன் ஆகவும் இருக்க, வேலைக்குப் போய் முதல் சம்பளம் வாங்கிய பின்தான் உன்னிடம் பேசுவேன் என்ற வைராக்கியத்தில் இருக்கிறார்.
வழக்கமாக அவர் கனவில் வருவதெல்லாம் நடக்க, அவரது அன்றைய நாள் உறக்கததில் வரும் கனவில் அவரது தந்தை விபத்துக்கு உள்ளாவதாக வர, அப்பாவைக் காக்க அவர் எடுக்கும் முயற்சி என்ன ஆனது என்பது படத்தின் ஒன் லைன்.

அன்பறிவு படத்தில்வில்லனாகி விட்ட விதார்த்நாயகனாக நடித்து
வெளியாகி இருக்கும் படம். அவரது சீரியசான முகத்துக்கு இந்த வேடம் பொருத்தமாகவே இருக்கிறது. அப்பாவுக்கு விபத்து ஏற்படும் என்று அறிந்த நிலையிலும் அதைத் தவிர்க்க இயலாத நிலையை அற்புதமாக நடித்து தாங்கி இருக்கிறார்.
அதேபோல் அது விபத்து இல்லை திட்டமிட்ட கொலை என்று தெரிந்து கொலையாளி யார் என்று தெரியும்போது அதனால் ஏற்படும் தவிப்பையும் நன்றாக வெளிப்படுத்தி இருக்கிறார்.

அம்மாவை ஈடுசெய்ய மனைவி வருவா. ஆனா அப்பாவுக்கு இணையா யாரும் வரமாட்டார்கள் என்று அவர் சொல்வது நெகிழ்ச்சி.
ஸ்வப்னாவின் அறிமுகம் அப்பாவியாக இருந்தாலும் அடுத்தடுத்து அவர் வரும் காட்சிகளில் அதகளம் செய்து பொருந்தி விடுகிறார். விதார்த்தின் அப்பாவாக நடித்திருக்கும் மாரிமுத்துவின் பாசம் நெகிழ வைத்திருக்கிறது. நேரில் பேசாத மகன் போன் அடித்ததும் புரிந்து கொண்டு அவனுக்கு வாய்ஸ் மெசேஜ் அனுப்பி வைக்கும் போது அப்பா பாசமும் அன்னைக்கு ஈடானது என்று புரிந்து கொள்ள முடிகிறது.போலீஸ் அதிகாரி மூணார் ரமேஷ், இளநீர் விற்கும் விக்ரம் ஜெகதீஷ், இன்ஷுரன்ஸ் ஏஜென்ட டவுட் செந்தில், ஏடிஎம் வாட்ச்மேன் மூர்த்தி என்று எல்லோருமே சரியாகப் பயன்பட்டு இருக்கிறார்கள்.இருந்தாலும் திரைக்கதை இயல்பாக இல்லாமல்வில்லததனத்தை காதல் வெல்கிறது என்பது வழக்கமான சினிமாத்தனம். என்கிறபோது திரைக்கதை வலிமை இழக்கிறதுவிவேகானந்த் சந்தோசம் ஒளிப்பதிவும் சாம்.சி.எஸ்ஸின் இசையும் ஓகே.
மாநாட்டுக்கு முந்தி வராததால் அதன் கார்பன் காப்பி என்று இப்போது சொல்லப்படக் கூடும்

நடிகர்கள்: விதார்த், ஸ்வப்னா, மாரிமுத்து, மூணார் ரமேஷ், விக்ரம் ஜெகதீஷ், டவுட் செந்தில், பிச்சைக்காரன் மூர்த்தி
இசை : சாம் சி.எஸ்
இயக்கம் : R.சீனிவாசன்
தயாரிப்பு: பெஞ்ச்மார்க் பிலிம்ஸ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *