• Tue. May 30th, 2023

சினிமா.. சினிமா… டாக்டர்.சிம்பு முதல் சூர்யா – ஜோ வீட்டு பொங்கல் வரை!

சினிமா.. இந்த வாரம்!

திரை நட்சத்திரங்களை துரத்தும் கொரோனா!
கொரோனா 3-வது அலை திரையுலகினரை கடுமையாக தாக்கி வருகிறது. நடிகர், நடிகைகள் பலர் கொரோனா தொற்றில் சிக்கி வருகிறார்கள். அந்த வகையில், ஜனவரி 9ம் தேதி, நடிகர் விஷ்ணு விஷாலுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது! இதனை தனது ட்விட்டர் பக்கத்தில் உறுதி செய்தார் விஷ்ணு விஷால்!

இதேபோல், முன்னணி நடிகையாக வலம் வரும் கீர்த்தி சுரேஷு, குஷ்பூ, பாடகி லதா மங்கேஸ்கர் ஆகியோருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது! மேலும் நடிகை ஷோபனாவுக்கு, ஓமிக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டது! குறிப்பிடத்தக்கது!

///////

‘கவுரவ டாக்டர்’ பட்டம் பெற்றார் சிம்பு..!

வேல்ஸ் பல்கலைகழகத்தில் நடைபெறும் பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்ட நடிகர் சிம்பு ‘கவுரவ டாக்டர்’ பட்டம் பெற்றார்.

வேல்ஸ் பல்கலைகழகம் ஆண்டுதோறும் கலைத்துறையில் சாதனைப் படைத்தவர்களுக்கு “கவுரவ டாக்டர்” பட்டத்தினை வழங்கி வருகிறது. இந்த வருடம் நடிகர் சிலம்பரசனுக்கு “கவுரவ டாக்டர்” வழங்கபட்டது! தேர்ந்தெடுத்துள்ளது. இதற்கு முன் எம்.ஜி.ஆர், சிவாஜி, கமல்ஹாசன், விக்ரம், விஜய் உள்ளிட்ட நடிகர்களுக்கு “கவுரவ டாக்டர்” பட்டத்தினை இந்நிறுவனம் வழங்கியுள்ளது.

சிம்புவின் ‘வெந்து தணிந்தது காடு’ ‘கொரோனா குமார்’ உள்ளிட்டப் படங்களின் தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் என்பது குறிப்பிடத்தக்கது.
////

சித்தார்த் – சாய்னா நேவால்! – ட்வீட் சர்ச்சை!

கடந்த ஜனவரி 5 ஆம் தேதி பிரதமர் மோடி பஞ்சாப் மாநிலத்திற்கு சென்றபோது அவர் திட்டமிடப்பட்ட நிகழ்ச்சிப் பகுதிக்கு செல்லும் வழியில் பாதுகாப்பு குறைபாடுகள் ஏற்பட்டதாக கூறி,அவர் பாதியிலேயே தமது பயணத்தை முடித்துக் கொண்டு டெல்லி திரும்பினார். இந்த விவகாரத்தை தேசிய பாதுகாப்பு பிரச்னையாக மத்திய உள்துறை அமைச்சகம் கருதியதையடுத்து, பிரதமரின் பாதுகாப்பு குறைபாடு குறித்து விசாரிக்க பஞ்சாப் அரசு,மத்திய உள்துறை அமைச்சகம்,உச்ச நீதிமன்றம் ஆகியவை தனித்தனியாக குழுக்களை அமைத்து விசாரித்து வருகின்றன.

இதற்கிடையில்,கடந்த சில தினங்களுக்கு முன்பு, இந்திய பேட்மின்டன் வீராங்கனை சாய்னா நேவால் தனது அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் பிரதமரின் மீது தாக்குதல் நடத்த வந்தவர்கள் அராஜகவாதிகள் என கூறி #BharatStandsWithModi என்ற ஹேஷ்டேக்கை பயன்படுத்தி ட்வீட் செய்திருந்தார்.

இதற்கு பதில் அளிக்கும் வகையில், நடிகர் சித்தார்த் அவரது ட்விட்டர் பக்கத்தில், இறகுப்பந்து உலகின் சாம்பியன், எங்களிடம் இந்தியாவின் பாதுகாவலர்கள் உள்ளனர்,கடவுளுக்கு நன்றி என்று தெரிவித்தார். இதில் இறகுப் பந்தின் ஆங்கில வார்த்தையான “ஷட்டல் கார்க்” என்பதை “Subtle Cock” என்று குறிப்பிட்டிருந்தார்.

சித்தார்த்தின் பதிவு சாய்னாவை இழிவுபடுத்துவதாக கண்டனம் எழுந்தது. அவருக்கு எதிராக பல தரப்பினர் பல்வேறு கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.சித்தார்த் மீது சட்ட ரீதியிலான நடவடிக்கை எடுக்க தேசிய மகளிர் ஆணையம் மகாராஷ்டிர மாநில டிஜிபிக்கு புகார் கடிதம் எழுதியுள்ளதாக தகவல் வெளியாகியிருந்தது.

இதனிடையே, விமர்சனத்திற்கு பதிலளித்த சித்தார்த், “நான் தரக்குறைவாக எதுவும் சொல்லவில்லை. “COCK & BULL” என்பதில் இருந்து தான் குறிப்பிட்டு அந்த கருத்தை பதிவிட்டேன். ஆபாசம் மற்றும் யாரையும் அவமரியாதை பதிவு செய்ய வேண்டும் என்கிற எந்தவொரு உள்நோக்கமும் எனக்கு இல்லை என்று விளக்கம் அளித்தார். இந்நிலையில், சாய்னாவிடம் நடிகர் சித்தார்த் மன்னிப்பு கோரியுள்ளார்.

இது தொடர்பான, தனது மன்னிப்பு கடிதத்தில் “அன்புள்ள சாய்னா,சில நாட்களுக்கு முன் உங்கள் ட்வீட் ஒன்றிற்கு பதிலடியாக நான் எழுதிய எனது முரட்டுத்தனமான நகைச்சுவைக்காக உங்களிடம் மன்னிப்பு கேட்க விரும்புகிறேன். நான் பல விஷயங்களில் உங்களுடன் உடன்படாமல் இருக்கலாம் ஆனால் உங்கள் ட்வீட்டைப் படிக்கும் போது எனக்கு ஏற்பட்ட ஏமாற்றம் அல்லது கோபத்தால் பேசிய எனது வார்த்தைகளை நியாயப்படுத்த முடியாது. ஜோக்கைப் பொறுத்தவரை.ஒரு ஜோக்கை விளக்க வேண்டும் என்றால், அது ஒரு நல்ல நகைச்சுவையாக இருக்க முடியாது.எனது நகைச்சுவைக்கு மன்னிக்கவும்.

எவ்வாறாயினும்,எனது வார்த்தை விளையாட்டு மற்றும் நகைச்சுவையானது அனைத்து தரப்பிலிருந்தும் தீங்கிழைக்கும் நோக்கம் எதுவும் கொண்டிருக்கவில்லை என்பதை நான் வலியுறுத்த வேண்டும்.நான் ஒரு உறுதியான பெண்ணிய கூட்டாளி மற்றும் எனது ட்வீட்டில் பாலினம் எதுவும் குறிப்பிடப்படவில்லை என்றும், ஒரு பெண்ணாக உங்களைத் தாக்கும் நோக்கம் நிச்சயமாக இல்லை என்றும் நான் உறுதியளிக்கிறேன். நீங்கள் எனது கடிதத்தை ஏற்றுக்கொள்வீர்கள் என்று நம்புகிறேன்,நீங்கள் எப்போதும் என் சாம்பியனாக இருப்பீர்கள்”,என்று தெரிவித்துள்ளார்.
////

தனுஷின் ‘மாறன்’ பட விடியோ போஸ்டர் வெளியானது

கார்த்திக் நரேன் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள ‘மாறன்’ திரைப்படம் நேரடியாக டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் வெளியாகவிருக்கிறது.

இந்தப் படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் தயாரித்துள்ளது.

இந்தப் படத்தின் மோஷன் போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது. விரைவில் இந்தப் படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தப் படத்தில் தனுஷுக்கு ஜோடியாக மாளவிகா மோகனன் நடித்துள்ளார்.

மேலும் இந்தப் படத்தில் சமுத்திரக்கனி, மகேந்திரன், கிருஷ்ணகுமார், ஸ்மிருதி வெங்கட் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இந்தப் படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார்.
////

இணையத்தில் வைரலான நடிகர் சூர்யா – ஜோ வீட்டு பொங்கல் படங்கள்!

நடிகர் சூர்யா அவரது குடும்பத்துடன் பொங்கல் வைத்து கொண்டாடிய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாள் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வரும் நிலையில், பல்வேறு தலைவர்கள், அரசியல்வாதிகள் மற்றும் நடிகர்கள் தங்கள் இல்லங்களில் கோலாகலமாக பொங்கல் கொண்டாடி வருகின்றனர். அந்த வகையில் நடிகர் சூர்யா அவர்களும் அவரது மனைவி மற்றும் சகோதரருடன் இணைந்து பொங்கல் கொண்டாடி உள்ளார். இது தொடர்பான புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *