இயக்குநர் சுந்தர்.சி 2006 ஆம் ஆண்டு கதாநாயகனாக அறிமுகமான படம் தலைநகரம் அவரது உதவியாளர்சுராஜ் இயக்குநராக அறிமுகமான படமும் இதுதான் வணிகரீதியாக வெற்றிபெற்ற இந்தப் படம் சுந்தர் சியை இயக்குநர் என்கிற பிம்பத்தில் இருந்து கதாநாயக நடிகராக திசைதிருப்பியதுதலைநகரம் படத்தில் வடிவேலுவின் நகைச்சுவை காட்சிகள் இன்றளவும் மீம்ஸ்கிரியேட்டர்களுக்கு கச்சாப்பொருளாக பயன்பட்டு வருகிறது இந்த படத்தின் தொடர்ச்சியாக நகரம் என்ற படத்தை சுந்தர்.சி இயக்கி நடித்திருந்தார்.
இந்த நிலையில் தலைநகரம் படத்தின் இரண்டாம் பாகம் வி.இசட்.துரை இயக்கத்தில் உருவாகி வருகிறது. இந்தப் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகர் ஆர்யா இன்று சமூக வலைத்தளத்தில்
வெளியிட்டுள்ளார்.”நாய் சேகர் ரிட்டன் படத்தை சுராஜ் இயக்கும் பணியில் இருப்பதால் தலைநகரம் – 2 படத்தை துரை இயக்குகிறார்.