ஸ்கை magic பட நிறுவனம் சார்பில் காயத்ரி ரஞ்சித் மற்றும் பாக்ய லட்சுமி டாக்கீஸ் நிறுவனம் சார்பில் ஈழத்தமிழர்கள் பங்களிப்பில் பாக்ய லட்சுமி வெங்கடேஷ் ஆகியோர்இணைந்து தயாரித்துள்ள படம் சினம் கொள்
இலங்கையில் தமிழர்களுக்கு தனிநாடு கேட்டு நடைபெற்று வந்ததமிழ் ஈழ போர்2009 இல் முடிவுக்கு வந்தது ஈழப் போராட்டம்நின்றுபோன பின் ஈழத்தமிழ்மக்கள்நிம்மதியாக
இல்லை அது பொய் என சர்வதேச அரங்கில் உரத்து குரல் கொடுத்துவருகின்றனர் இலங்கைத் தமிழர்கள் யுத்தம் முடிவுக்கு வந்த பின் அது சம்பந்தமாக ஏராளமான திரைப்படங்கள் வணிக நோக்குடன் தயாரிக்கப்பட்டு வெளியாகியுள்ளது ஆனால்
இன்றைய இலங்கையில் வாழும் தமிழ் மக்கள் நிலை என்ன என்பதை சமரசமின்றி யதார்த்தமாக பதிவு செய்திருக்கும் முதல் படமாக இலங்கைத் தமிழர்களால் வழிமொழியப்பட்ட படமாக உள்ளது சினம்கொள்
இலங்கையில் தமிழ் மக்கள் நுட்பமான இன அழிப்பு,பாரம்பரிய நிலம் பறிப்பு ஆகியவற்றுக்கு உள்ளாகி சொல்லொணாத் துயரத்தை அனுபவித்து வருகிறார்கள் என்பதை ஆழமாகவும் அழகியலுடன் கூடிய கலைப்படைப்பாக சொல்லியிருக்கிற படம்தான் சினம்கொள்.ஈழ ஆய்வாளர் பரணி கிருஷ்ணரஜனி,புற்று நோயால் பாதிக்கப்பட்டு இறந்த விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முன்னணி பொறுப்பாளரான தமிழினி அவர்களின் சாவு இயற்கையானது அல்ல என குறிப்பிட்டிருந்தார். அத்துடன், இலங்கைச் சிறையிலிருந்து “விடுதலை“யான போராளிகள் அனைவருமே வெளியில் வந்த குறுகிய காலத்தில் நோய்வாய்ப்பட்டு இறப்பதைப் பற்றியும், 2009 ஆம் ஆண்டு முடிவுக்கு வந்த ஆயுதம் ஏந்திய போருக்குப் பின்னர், தமிழீழப்பகுதிகளில் தமிழ்மக்களுக்கு சொந்தமான பல்லாயிரக்கணக்கனஏக்கர் பாரம்பர்ய நிலங்களை பாதுகாப்பு வளையம் என்கிற பெயரில் சிங்கள இராணுவம் ஆக்கிரமித்து வைத்துள்ளது எனக் குறிப்பிட்டிருந்தார்இவற்றை அடிப்படை திரைக்கதையாக கொண்டுள்ளது சினம்கொள்.
சிறையிலிருந்து எட்டாண்டுகளுக்குப் பின் வெளியே வருகிற போராளி அமுதனின் பார்வையில் விரியும் திரைக்கதை அடுத்தடுத்துப் பல அதிர்வுகளை படம் பார்க்கும் பார்வையாளனுக்கு ஏற்படுத்திக்கொண்டேயிருக்கிறது.
அமுதனாக நடித்திருக்கும் அரவிந்தன் சிவஞானம், அசல் போராளியாகவே படத்தில் வாழ்ந்திருக்கிறார் கண்களில் அவர் காட்டும் சோகமும் உறுதியும் ஈழ போராளிகளை நினைவூட்டுகிறதுகடத்தப்பட்ட பெண்ணை மீட்கப் படகில் செல்லும் காட்சியில் நெஞ்சு நிமிர்த்தி அவர் நிற்பதும் அண்ணனின் தம்பி(பிரபாகரன்) எனஅடித்துப்பேசுவதும் அவருக்குப் பெருமை சேர்க்கின்றன.
அவருடைய மனைவியாக நடித்திருக்கும் நாவினி டெரி பல்லாண்டுகளுக்குப் பிறகு கணவன் முகம் கண்டதும் கதறிக்கொண்டு ஓடிவரும் காட்சியில் கலங்காத கல்நெஞ்சையும் கலங்கடித்துவிடுகிறது
போராளி யாழினியாக நடித்திருக்கும் லீலாவதி பேசும் வசனங்கள் ஒட்டுமொத்த தமிழ்மக்களுக்கான அறிவுரை.
பிரேம்,தீபச்செல்வன்,தனஞ்செயன், பாலா,மதுமிதா, பேபி டென்சிகா உட்படபடத்தில்நடித்திருக்கிற
அனைவரும் யதார்த்தம் மீறாத நடிப்பால் படத்துக்குப் பலம் சேர்த்திருக்கிறார்கள்.
எம்.ஆர்.பழனிக்குமாரின் ஒளிப்பதிவு ஈழத்தின் இயற்கை எழிலையும் ஈழத்துமக்களின் அவல வாழ்வையும் ஒருங்கே காட்சிப்படுத்தியிருக்கிறது.
என்.ஆர்.ரகுநந்தன் இசையில் பாடல்கள் உருகவைக்கின்றன. பின்னணி இசை திரைக்கதைக்குப் பக்க பலமாக அமைந்திருக்கிறது.
படத்தின் வசனங்களையும் பாடல்களையும் எழுதியதோடு ஒரு போராளி வேடத்திலும் நடித்திருக்கிறார் தீபச்செல்வன். அவர் பொறுமையாகத் தெரிகிறார். அவருடைய வசனவரிகள் ஒவ்வொன்றும் அனலாய் தெரிக்கிறது ஒரே படத்தில் இவ்வளவு விசயங்களை, அதுவும் நுட்பமான அரசியல் விசயங்களையும் ஒரு வசனம் ஒரு காட்சி மூலம் பார்வையாளனுக்குகடத்திவிட முடியும் என்பதற்குச் சான்றாக விளங்குகிறார் இயக்குநர் ரஞ்சித் ஜோசப். ஆயுதம் ஏந்தியபோருக்குப் பின்னர் தமிழ் நிலங்களில் சிங்களர்களின் ஆக்கிரமிப்பு, போர்க்காலத்தில் இயக்கம் உருவாக்கிய தொழில்களின் மேற்பார்வையாளராக இருந்தவர்களே அதற்கு தனி உரிமையாளர்களாகி ஒதுங்கியது,தமிழினத்துக்குள்ளேயே இருக்கும் எட்டப்பன்கள், ஈழமக்களின் இன்றைய கையறுநிலை, குறிப்பாக போராளிகளின் நிலை ஆகிய எல்லாவற்றையும் சமரசம் இன்றி நேர்மையாககாட்சிப்படுத்தியிருக்கிறார் இயக்குநர்.ஜெயில்ல இருந்து வர்ற பொடியன்கள் எல்லாம் கொஞ்சநாள்ல இப்படி திடீர்னு,செத்துப்போயிடுதுகள் என்கிற ஒற்றைவரி வசனத்துக்குள் ஓராயிரம் செய்திகள் சொல்லப்பட்டிருக்கின்றன.
எல்லாவற்றையும் தாண்டி அன்றாட வாழ்வுக்கே அல்லாடும் நிலை என்றாலும் மனம் தளராமல், குழப்பம் இல்லாமல் அண்ணன் (பிரபாகரன்) சொன்ன அறமே நம்மைக் காக்கும் நம் இனத்தைக் காக்கும் என்று ஆணித்தரமாக அடித்துச் சொல்லியிருக்கும் ரஞ்சித் ஜோசப் இருளில் இருக்கும் ஈழத்தமிழர்களுக்கு கலை வெளிச்சமாக மின்னுகிறார்.
திரையரங்குகளில் வெளியிடக் கூடிய சர்வதேச தரத்துடன் சினம்கொள் படம் தயாரிக்கப்பட்டு இருந்தாலும் தணிக்கை சான்றிதழ் பெற போராட வேண்டியிருக்கும் என்பதால்படத்தை 14.01.2022 பொங்கல் முதல் Eelam play என்ற ஓ.டி.டி தளத்தில் வெளியிட்டுள்ளனர்
நடிகர், நடிகைகள்:
அரவிந்தன் சிவஞானம்
நர்வினி டெரி
லீலாவதி
பிரேம்
தீப செல்வன்
தனஞ்ஜெயன்
பாலா
மதுமிதா
பேபி டென்சிகா
தொழில் நுட்பக் கலைஞர்கள்:

ஒளிப்பதிவு :M.R.பழனிக்குமார்
இசை :N.R.ரகுநந்தன்
வசனம் மற்றும் : தீபச் செல்வன்.
எடிட்டிங் – அருணாசலம் சிவலிங்கம்.
கலை – நிஸங்கா ராஜகரா.
தயாரிப்பு:காயத்ரி ரஞ்சித், பாக்யலட்சுமி வெங்கடேஷ்.
கதை, திரைக்கதை,
இயக்கம்: ரஞ்சித் ஜோசப்




- புதிய நாடாளுமன்ற கட்டிடம்… சு.வெங்கடேசன் எம்.பி. அதிர்ச்சி தகவல்புதிய நாடாளுமன்ற கட்டிடத்திற்கு ஆலோசனை கூட்டத்திற்கு சென்ற மதுரை எம்.பி.சு.வெங்கடேசன் செய்தியாளர்களிடம் நாடாளுமன்ற கட்டிடம் குறித்த […]
- பள்ளிகள் திறப்பு- சிறப்பு பேருந்துகள் இயக்க முடிவுகோடை விடுமுறை முடிந்து ப ள்ளிகள் வரும் 7 ம் தேதி திறக்கப்பட உள்ள நிலையில் […]
- மேயர், ஆணையாளரின் உருவப்பொம்மைக்கு சால்வை அணிவித்து வரவேற்ற பெண் கவுன்சிலர்மதுரை மாநகராட்சி 20ஆவது வார்டு பகுதியில் மேயர் ஆணையாளரின் உருவப்பொம்மைகள் ஆய்வு மேற்கொண்டதால் பரபரப்பு – […]
- சதுரகிரிமலையில் பக்தர்கள் கூட்டம் குவிந்தது..விருதுநகர் மாவட்டம் திருவில்லிபுத்தூர் அருகேயுள்ள, மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற சதுரகிரிமலை […]
- கோகுல்ராஜ் கொலை வழக்கு..யுவராஜூக்கு சாகும் வரை ஆயுள்ஓமலூரைச் சேர்ந்த பொறியியல் பட்டதாரி மாணவர் கோகுல்ராஜ் தலை துண்டிக்கப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்ட வழக்கில் […]
- ஜூன் 9ல் தமிழகத்தின் அனைத்து பள்ளிகளிலும் மேலாண்மைகுழு கூட்டம்..!தமிழ்நாடு முழுவதும் அனைத்து பள்ளிகளிலும் வரும் 9ஆம் தேதி பள்ளி மேலாண்மைக் குழு கூட்டம் நடத்த […]
- போக்குவரத்து விதிமீறல்களை கண்டுபிடிக்க நவீன வாகனம் அறிமுகம்..!
- பிளஸ் 2 முடித்தவர்களுக்கு மத்திய அரசு வேலை..!டெல்லி வளர்ச்சி ஆணையம் ஆனது பல்வேறு பணியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. […]
- தென்காசி அருகே பிட்பாக்கெட் அடித்த மூதாட்டி கைதுதென்காசி மாவட்டம் புளியங்குடி பஸ் நிலையத்தில் பிட்பாக்கெட் அடித்த மூதாட்டியை போலீசாரால் கைது செய்யப்பட்டார்.புளியங்குடியில் இருந்து […]
- கருணாநிதியின் நூற்றாண்டு விழா இலச்சினை வெளியீடுகலைவாணர் அரங்கில் நடைபெறும், நிகழ்ச்சியில் கலைஞர் கருணாநிதியின் நூற்றாண்டு விழா இலச்சினையை மேற்கு வங்க மாநில […]
- நீங்கள் எப்போதும் ராஜாதான்..! ” – முதலமைச்சர் வாழ்த்துஎங்கள் இதயங்களில் நீங்கள் எப்போதும் இராஜாதான்! வாழ்க நூறாண்டுகள் கடந்து!” – முதல்வர் ஸ்டாலின் இளையராஜவுக்குபிறந்த […]
- ஆசிரியர்களுக்கு குட்நியூஸ் சொன்ன சென்னை உயர்நீதிமன்றம்..!தமிழகத்தில் ஆசிரியர்களுக்கு இனி தகுதி தேர்வு கட்டாயம் இல்லை என சென்னை உயர்நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.தமிழகத்தில் […]
- இலக்கியம்நற்றிணைப் பாடல் 178: ஆடு அமை ஆக்கம் ஐது பிசைந்தன்னதோடு அமை தூவித் தடந் தாள் […]
- பொது அறிவு வினா விடைகள்
- குறள் 445சூழ்வார்கண் ணாக ஒழுகலான் மன்னவன்சூழ்வாரைக் சூழ்ந்து கொளல்பொருள் (மு.வ):தக்க வழிகளை ஆராய்ந்து கூறும் அறிஞரையே உலகம் […]