திருவண்ணாமலை மாவட்டத்தில் காலியாக உள்ள சத்துணவுப் பணியாளர்களுக்கான நேரடி நியமன அறிவிப்பு ரத்து செய்யப்படுவதாக மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள பள்ளிகளின் சத்துணவு மையங்களில் 1.10.2020 அன்று காலியாக இருந்த சத்துணவு அமைப்பாளர், சமையலர், சமையல் உதவியாளர் பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்புவதற்கான அறிவிப்பு பத்திரிகைகள் வாயிலாக விளம்பரம் செய்யப்பட்டிருந்தது.
இந்த அறிவிப்பு சென்னை சமூக நல இயக்குநரிடமிருந்து வரப்பெற்ற உத்தரவின்படி ரத்து செய்யப்படுகிறது. இந்தப் பணிக்கு விண்ணப்பித்தவர்கள், முறையிடுதல் அல்லது மேல்முறையீடு செய்யக்கூடாது என்று மாவட்ட ஆட்சியர் பா.முருகேஷ் தெரிவித்துள்ளார்.