• Mon. Dec 9th, 2024

அமைச்சரவை கூட்டம் ஆகஸ்ட் 29 ம் தேதிக்கு மாற்றம்..

Byகாயத்ரி

Aug 26, 2022

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆகஸ்ட் 30ஆம் தேதி சட்டப்பேரவை வளாகத்தில் அமைச்சரவை கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது தேதி மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, 29-ஆம் தேதி மாலை 6 மணியளவில் அமைச்சரவை கூட்டம் நடைபெறவுள்ளது. இந்த கூட்டத்தில் அனைத்து அமைச்சர்களும் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. கூட்டத்தில், தொழிற்கொள்கை, புதிய விமான நிலையம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் மழை பெய்து வரும் நிலையில், பருவ மழை தொடங்குவதற்கு முன்பதாக முன்னெச்சரிக்கை பணிகளை மேற்கொள்வது குறித்தும் ஆலோசனை நடத்தப்பட உள்ளதாக கூறப்படுகிறது.