• Wed. Apr 24th, 2024

இந்த கோர்ஸ் படித்தால் அரசு வேலை உறுதி

ByA.Tamilselvan

Aug 26, 2022

இந்திய அளவில் அடுத்த பத்தாண்டுகளில் 3 லட்சம் ஊரமைப்பு வடிவமைப்பாளர்கள் தேவைப்படுவார்கள் என்றும், அதற்கேற்ப ஆண்டுக்கு 8 ஆயிரம் பேரை உருவாக்கும் வகையில், புதிய படிப்புகளை தொடங்க வேண்டும் என்றும் உயர்கல்வி நிறுவனங்களுக்கு நிதி ஆயோக் பரிந்துரை செய்துள்ளது.
இளநிலை திட்டமிடல் பட்டம் பி.பிளான் படிப்பில் 6 ஆயிரம் பேரும், முதுநிலை திட்டமிடல் எம்.பிளான் படிப்பில் 2 ஆயிரம் பேரும் என, ஆண்டுக்கு 8 ஆயிரம் பேரை உருவாக்க வேண்டும் என்றும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
அதன்படி, நடப்பு கல்வி ஆண்டிலேயே அண்ணா பல்கலைக்கழகத்தின்- கட்டிடக்கலை – திட்டமிடல் பள்ளியில், இளநிலை, முதுநிலை திட்டமிடல் பட்டப்படிப்புகள் தொடங்கப்படுகின்றன. இளங்கலை பட்டப் படிப்பில் 75 இடங்களும், முதுகலை பட்டப் படிப்பில் 60 இடங்களும் நிரப்பப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்காக, முதல் கட்டமாக, சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம், நகர்ப்புற ஊரமைப்பு திட்ட இயக்ககம் ஆகியவை இணைந்து 10 கோடி ரூபாயை வழங்குகின்றன. 5 ஆண்டு களுக்குதமிழக அரசின் சார்பில் மொத்தம்18 கோடியே 54 லட்சம் ரூபாய் ஒதுக்கப்படுகிறது.அவசரத் தேவை என்பதால் போர்க்கால அடிப்படையில் இந்தப் படிப்பு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது என்று அண்ணா பல்கலைக்கழக பேராசிரியர்கள் தெரிவிக்கின்றனர்.சிவில் இன்ஜினீயரிங் எனப்படும் கட்டுமானப் பொறியியல் படித்தவர்களுக்கு இது கூடுதலாக பயன்படும் என்கின்றனர், கல்வி ஆலோசகர்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *