• Thu. Jul 23rd, 2026
WhatsAppImage2026-07-09at2243541
previous arrow
next arrow
Read Now

விராலிமலையில் நடைபெற்ற செயல்வீரர்கள் கூட்டத்தில் சி.விஜயபாஸ்கர் பேச்சு..,

Byமுகமதி

Mar 1, 2026

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை சட்டமன்ற தொகுதி விராலிமலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் அஇஅதிமுக விராலிமலை மேற்கு விராலிமலை தெற்கு மற்றும் விராலிமலை நகர கழகங்களின் சார்பில் 2026 சட்டமன்ற தேர்தலில் எதிர் கொள்ளும் வகையில் அஇஅதிமுக, பாஜக, அமமுக, தமாக, ஐஜேகே, தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் மற்றும் தேசிய ஜனநாயக கூட்டணி சேர்ந்த கூட்டணி கட்சியினர் சுமார் 5000க்கும் மேற்பட்டோர் இந்த கூட்டத்தில் பங்கேற்றனர்

இந்த கூட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர்:-

‘அண்ணா திமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஆனது வலிமையான கூட்டணி வளமான கூட்டணி ஒரு மகத்தான கூட்டணி இந்தக் கூட்டணி உங்கள் வாழ்க்கை வளமாக்கும்’

‘இந்த விஜயபாஸ்கருக்கு சோர்வு ஏற்பட்டதா இல்லை… இன்னமும் வேகமாக விராலிமலை சட்டமன்ற தொகுதிக்கு இந்த இயக்கத்திற்கு அண்ணாதிமுகவுக்கு நான் எப்போதும் உங்களுக்கு விசுவாசமாக இருப்பேன்’

‘தேராக இருந்தாலும் திருவிழாவாக இருந்தாலும் ஜல்லிக்கட்டாக இருந்தாலும் அதில் கலந்துக்குறதும் உங்க முகத்தை பார்க்குறது மட்டும் தான் எனக்கு மகிழ்ச்சி இதான் உங்களுக்கும் எனக்குமான பந்தம்’

‘எழுதி வைத்துக் கொள்ளுங்கள் இன்னும் இரண்டே மாதத்தில் நமக்கான ஆட்சி நம்முடைய ஆட்சி இரட்டை இலை ஆட்சி உறுதியாக உறுதியாக வரும் நம்ம ஆளுங்கட்சியாக வருகிறோம். அண்ணன் எடப்பாடியார் முதலைமைச்சராக வருவார் அப்போது காவிரி நீரும் வரும் காவிரி ஆறும் வரும் இந்தப் பகுதி நெல்லும் கரும்பும் வாழையும் மஞ்சளும் விளையக்கூடிய பகுதியாக மாற்ற வேண்டும் என்பது எனது ஆசை’

‘இன்னும் நிறைய ஆசை இருக்கிறது காவிரி ஆற்றை வெட்டிக் கொண்டு வந்து புதுக்கோட்டை மாவட்டம் முழுக்க மட்டுமல்ல ஏழு மாவட்டத்தை வளமாக்க வேண்டும் என்பது எனக்கு தலையாய கடமை’ என்று பேசினார்

மேலும் இந்த கூட்டத்தில் மாவட்ட கழக அவைத் தலைவர் ராமசாமி, பிஜேபி மாவட்ட தலைவர் ராமச்சந்திரன், ஒன்றிய செயலாளர்கள் பழனியாண்டி, நாகராஜ், திருமூர்த்தி, AVR.ராஜேந்திரன், ராமநாதன், முத்தமிழ்செல்வன், நகர செயலாளர் செந்தில் மற்றும் மாநில நிர்வாகிகள் MTR.தமிழரசன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் நெடுஞ்செழியன், நார்த்தாமலை ஆறுமுகம், ராஜு மற்றும் மாவட்ட சார்பு அணி செயலாளர்கள் பழனிவேல், சுமன் காளிதாஸ், ராஜா மரியதாஸ், மகளிரனி அன்னலட்சுமி, IT WING ரஞ்சித்குமார், டாக்டர்.சரத்குமார், திருச்சி மண்டல செயலாளர் மணிகண்டன் உள்ளிட்ட விராலிமலை ஒன்றியத்துக்கு உட்பட்ட அதிமுக நிர்வாகிகள் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.