


புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே கடியாப்பட்டியில் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு மாட்டு வண்டி எல்கை பந்தயம் நடைபெற்றது. இந்தப் பந்தயத்தை ஊராட்சி மன்ற தலைவர் உமா மகேஸ்வரி சோமசுந்தரம் மற்றும் கமிட்டி நிர்வாகிகள் கொடியாசித்து தொடங்கி வைத்தனர் பெரிய மாடு சிறிய மாடு என இரு பிரிவுகளாக நடைபெற்ற பந்தயத்தில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்த 17 மாட்டு வண்டிகள் கலந்து கொண்டன.

சீறி பாய்ந்து கொண்டு ஒன்றை ஒன்று முந்தி சென்ற மாட்டு வண்டிகளை சாலையின் இரு புறங்களிலும் இருந்த ஏராளமானோர் கண்டு ரசித்தனர். வெற்றி பெற்ற மாட்டு வண்டிகளின் உரிமையாளர்களுக்கும் அதனை ஓட்டி வந்த சாரதிகளுக்கும் முதல் பரிசு 50 ஆயிரம் இரண்டாம் பரிசு 40 ஆயிரம் உள்ளிட்ட மொத்தம் எட்டு ரொக்க பரிசுகளும் பரிசு பொருட்களும் வழங்கப்பட்டது.


