



ஸ்ரீ பூர்ணா புஷ்கலம் சமேத அடைக்கல காத்த அய்யனார் திருக்கோயில் முதலாம் ஆண்டு மாபெரும் மாட்டு வண்டி எல்லை பந்தயம் நடைபெற்றது.
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி தாலுகா வாண்டாகோட்டை கிராமத்தில் அருள் பாலித்து கொண்டு இருக்கும் ஸ்ரீ பூர்ண புஷ்பலக் சமேத அடைக்கலம் காத்த அய்யனார் திருக்கோயில் பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு வாண்டா கோட்டை இளைஞர்களாலும் பொதுமக்களாலும் நடத்தப்படும் முதலாம் ஆண்டு மாபெரும் மாட்டுவண்டி எல்லைப் பந்தயம் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியை துவக்கி வைப்பதற்காக பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சிவ வீ மெய்ய நாதன் கலந்து கொண்டு மாட்டு வண்டி பந்தயத்தை துவக்கி வைத்தார் உடன் திருவரங்குளம் ஊராட்சி ஒன்றிய தலைவர் கே பி டி கே தங்கமணி வாண்டாகோட்டை தலைவர் வனஜா நடராஜன் குலவாய்ப்பட்டி ஒன்றிய தலைவர் வடிவேலு மாவட்ட கவுன்சிலர் உஷா செல்வம் மற்றும் திமுக ஒன்றிய துணைச் செயலாளர் கே வி எஸ் சண்முகம் ஆகியோர் கலந்து கொண்டு மாட்டு வண்டி எல்லை பந்தயத்தை துவக்கி வைத்தனர்.
இதில் பெரிய மாடு ஏழு மாடு கலந்துகொண்டு சுற்றிவர எட்டு மயில் தூரம் கணக்கிடப்பட்டு இதில் வெற்றி பெறும் மாட்டு வண்டிகளுக்கு சிறப்பு பரிசு வழங்கப்பட்டது. பிறகு தொடங்கப்பட்ட இரண்டாம் சுற்று சிறிய மாடு 10 மாடுகள் சென்று வர தூரம் ஆறு மயில் கணக்கிடப்பட்டு வெற்றி பெற்ற மாட்டிற்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

