• Fri. Aug 28th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

சிம்பு குரலில் ‘புல்லட்’ பாடல்!

இயக்குனர் லிங்குசாமி இயக்கத்தில் உருவாகும் தி வாரியர் படத்தின் முதல் சிங்கிள் பாடல் அப்டேட் வெளியாகியுள்ளது.

கடந்த 2018 ஆம் ஆண்டு சண்டக்கோழி 2 என்ற படத்தை இயக்கிய லிங்குசாமி அதன்பின் நான்கு ஆண்டுகள் கழித்து இயக்கி வரும் திரைப்படம் ‘தி வாரியர்’. இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் தற்போது இந்த படம் ஜூலை 14-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டு உள்ளது இதனை அடுத்து இந்த படத்தின் புரமோஷன் பணிகள் விரைவில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் இந்த படத்தில் இடம்பெறும் ஒரு பாடலை நடிகர் சிம்பு தேவி ஸ்ரீ பிரசாத் இசையில் பாடியுள்ளார். தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளிலுமே அந்த பாடலை சிம்புவே பாடியுள்ளார். புல்லட் என்று இந்த பாடல் வரும் ஏப்ரல் 22 ஆம் தேதி வெளியாக உள்ளதாக தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.