• Fri. Aug 28th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

ஸ்பைடர்மேன் படம் பார்த்து கின்னஸ் சாதனை!

இயக்குநர் ஜான் வாட்ஸ் இயக்கத்தில் கடந்த ஆண்டு டிசம்பர் 16ம் தேதி வெளியான படம் ஸ்பைடர்மேன் நோ வே ஹோம். தீவிர மார்வெல் ரசிகரான ஃப்ளோரிடாவை சேர்ந்த ராமிரோ அலானிஸ் (Ramiro Alanis) ஸ்பைடர்மேன் நோ வே ஹோம் திரைப்படத்தை தொடர்ந்து தியேட்டரில் 292 முறை பார்த்து அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தி உள்ளார். டிசம்பர் 16, 2021 முதல் மார்ச் 15, 2022 வரை 720 மணி நேரங்கள் (30 நாட்கள்) செலவு செய்து இந்த சாதனையை அவர் படைத்துள்ளார்.

ஸ்பைடர்மேன் நோ வே ஹோம் படம் வெளியான வாரத்தில் ஒவ்வொரு நாளும் தொடர்ச்சியாக 5 காட்சிகள் என 7 நாட்கள் தொடர்ந்து தியேட்டரிலேயே குடிகொண்டு படத்தை பார்த்து இருக்கிறார் மனுஷன். இதுவரை எந்தவொரு ரசிகரும் செய்யாத அளவுக்கு 292 முறை படம் பார்த்து கின்னஸ் சாதனை படைத்துள்ளார்.

கின்னஸ் சாதனையில் இடம் பெற வேண்டுமென்றால் படத்தை ஆரம்பம் முதல் எண்ட் கிரெடிட்ஸ் முடியும் வரை பார்க்க வேண்டும். மேலும், படம் பார்க்கும் போது செல்போன் நோண்டவோ, தூங்கவோ, படம் ஓடிக் கொண்டிருக்கும் போது பாத்ரூமிற்கோ செல்லக் கூடாது. பல நாட்கள் தலைவலியுடன் படத்தை பார்த்ததாக ராமிரோ அலானிஸ் தெரிவித்துள்ளார். மே மாதம் வெளியாகப் போகும் அடுத்த மார்வெல் திரைப்படமான டாக்டர் ஸ்ட்ரேஞ்ச் மல்டிவெர்ஸ் மேட்னஸ் படத்தின் ப்ரீமியருக்கே இவருக்கு அழைப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.