ராஜமவுலியின் இயக்கத்தில் பாகுபலி படத்தில் நடித்த பிரபாஸ் அதன் பின் அகில இந்திய நடிகர் ஆனார் இந்தியா முழுவதும் சாமான்யர்களுக்கும் அறிமுகமான நடிகரானார் அதற்கு காரணம் பாகுபலி படத்தின் விஸ்வரூப வெற்றிதான்சமீபத்தில் ராஜமவுலி இயக்கத்தில் வெளியான RRR படத்தில் ராம்சரண் – ஜீனியர் என்.டி.ஆர் இருவரும்நடித்திருந்தார் ஷங்கர் இயக்கத்தில் ராம்சரண் நாயகனாக நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு தற்போது பஞ்சாப் மாநிலத்தில் நடைபெற்று வருகிறது
பான் இந்தியா படமாக வெளியான ஆர்ஆர்ஆர் படத்தின் மூலம் ராம்சரணுக்கு இந்திய அளவில் மிகப்பெரிய அறிமுகம் கிடைத்துள்ளதை பஞ்சாப்பில் நடைபெற்ற படப்பிடிப்பில் பார்க்க முடிந்தது..இந்த படத்தின் படப்பிடிப்பிற்கு பாதுகாப்பு பணிக்காக நியமிக்கப்பட்ட பஞ்சாப் போலீசார், ராம்சரணுடன் ஆர்வமாக புகைப்படங்களும் செல்பியும் எடுத்துக் கொண்டனர். அதுமட்டுமல்ல அந்த படப்பிடிப்பு பகுதியில் வேடிக்கை பார்க்க கூடிய பொதுமக்கள் குறிப்பாக இளம்பெண்கள் ராம்சரணுடன் புகைப்படம் எடுக்க முண்டியடிக்க, ராம்சரண் அவர்கள் ஒவ்வொருவரின் மொபைல் போனையும் வாங்கி அவர்களுடன் தானே செல்பி எடுத்து கொடுத்த வீடியோ ஒன்று சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.
வடக்கிலும் பிரபலமான தெலுங்கு நடிகர் ராம்சரண்
