இந்தியாவில் தயாரிக்கப்பட்ட பிரம்மோஸ் ஏவுகணை பரிசோதனையில் வெற்றி பெற்றுள்ளது.
இந்திய கடற்படைக்கு சொந்தமான ஐ எம் எஸ் மொர்முகவ் போர்க்கப்பலில் இருந்து பிரம்மோஸ் ஏவுகணை நேற்று ஏவி வெற்றிகரமாக பரிசோதனை செய்யப்பட்டது. இதில் போர்க்கப்பலில் இருந்து ஏவப்பட்ட பிரமோஸ் ஏவுகணை இலக்கை வெற்றிகரமாக தாக்கி அழித்துள்ளது. இந்த ஐ என் எஸ் மொர்முகவ் போர் மற்றும் பிரம்மோஸ் ஏவுகணை இரண்டுமே இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்டவை ஆகும். ஐஎன்எஸ் மொர்முகவ் போர்க்கப்பலில் இருந்து பிரமோஸ் ஏவுகணை ஏவி பரிசோதனை செய்யப்பட்டது இதுவே முதல் தடவையாகும். இதன் மூலமாக போர் கப்பலின் வலிமை மேலும் அதிகரித்துள்ளது.