காரைக்குடியில் தங்க கடத்தல் கும்பலால் அடைத்து வைக்கப்பட்ட எம்.பி.ஏ பட்டதாரியை காவல்துறையினர் மீட்டு, சம்மந்தப்பட்டவர்களை கைது செய்துள்ளனர். மேலும் ஒருவரை வலைவீசி தேடி வருகின்றனர்.
காரைக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த ஸ்ரீராம் என்பவரை தங்க கடத்தல் கும்பல் மண்ணடி பகுதியில் உள்ள ஒரு ஹோட்டலில் அடைத்து வைத்திருப்பதாக அவருடைய நண்பர் அசாருதீன் வாட்ஸ் அப் குழுக்களில் புகைப்படத்துடன் செய்திகள் அனுப்பினார். அதன் பிறகு சம்பந்தப்பட்ட ஹோட்டலை 20 போலீசார் சுற்றி வளைத்தனர். அந்த ஹோட்டலில் இருந்து ஸ்ரீராமை போலீசார் மீட்டதோடு, அங்கிருந்த இருவரையும் கைது செய்தனர். அதன் பிறகு போலீசார் நடத்திய விசாரணையில் ஸ்ரீராம் எம்பிஏ படித்துவிட்டு வேலை கிடைக்காமல் இருந்துள்ளார்.
இதனால் சென்னை தண்டையார்பேட்டையை சேர்ந்த அசார் என்பவருடன் சேர்ந்து கடத்தல் தொழிலில் ஈடுபட்டுள்ளார். அவர் விமானத்தில் தங்கத்தை கடத்தி வந்த போது சுரங்க அதிகாரிகள் அங்கு இருந்ததால் பயத்தில் ஸ்ரீராம் குப்பை தொட்டியில் தங்கத்தை போட்டுள்ளார். இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த அசார் ஸ்ரீராமை கடத்தி சென்று ஹோட்டலில் அடைத்து வைத்து துன்புறுத்தியுள்ளார். தற்போது ஸ்ரீராமை அடைத்து வைத்து கொடுமைப்படுத்திய முகமது அர்ஷத், நவீன், ஜெயராம் ஆகிய மூன்று பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் அசாரை போலீசார் வலை வீசி தேடி வருகிறார்கள்.