


அதிமுக-வில் இளைஞர்கள், இளம்பெண்கள், அதிக அளவில் சேர்ந்து வருவதால் முன்னாள் அமைச்சர் கே. டி.ராஜேந்திரபாலாஜி மகிழ்ச்சி அடைந்தார்.
சிவகாசி ஒன்றியற்குட்பட்ட முனிஸ்வரன் காலனி, போஸ் காலனி, நாரணாபுரம், பள்ளபட்டி, முத்துராமலிங்கபுரம், லிங்காபுரம் காலனி, ஆலமரத்துப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் பூத் கமிட்டி கூட்டம் நடைபெற்றது.

விருதுநகர் மேற்கு மாவட்ட பூத் கமிட்டி பொறுப்பாளர் ஜான் மகேந்திரன் தலைமை வகித்தார். பிலிப்பாசு சிவகாசி மாநகராட்சி மாமன்ற உறுப்பினர் சரவண பாண்டியன் முன்னிலையில் வைத்தனர்.

சிறப்பு அழைப்பாளராக விருதுநகர் மேற்கு மாவட்ட கழக செயலாளரும் முன்னாள் அமைச்சருமான கே. டி. ராஜேந்திர பாலாஜி பூத் கமிட்டி பாரங்களை சரி பார்த்தார். தொடர்ந்து பூத்து கமிட்டி உறுப்பினர்களை அறிமுகம் செய்து பொன்னாடை போர்த்தி சிறப்பாக பணியாற்றுமாறு கேட்டுக் கொண்டார். அதிமுக தலைமையிலான கூட்டணி மாபெரும் வெற்றி பெற்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடியார் மீண்டும் முதலமைச்சராக வருவார்.

அதிமுக ஆட்சியில் 10 ஆண்டுகள் அமைச்சராக பணியாற்றியுள்ளேன். சிவகாசி சட்டமன்ற தொகுதிக்கு பல்வேறு அடிப்படை வசதிகள் நிறைவேற்றப்பட்டுள்ளது. தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்டம் விருதுநகர் மாவட்டத்திற்கு கொண்டுவரப்பட்டதற்கு அதிமுக தான் காரணம். அதற்கு என்னுடைய பணியும் குறிப்பிடத்தக்கது.

இத்திட்டத்தின் மூலம் சிவகாசி சட்டமன்றத் தொகுதியில் குடிநீர் பிரச்சினை நிரந்தரமாக தீர்த்து வைக்கப்பட்டுள்ளது. மீண்டும் அதிமுக ஆட்சியில் வந்தால் மேலும் மக்களின் பல்வேறு பிரச்சனைகள் நிரந்தரமாக தீரும் என கூறினார்.


