


விருதுநகர் மாவட்டம் மம்சாபுரத்தில் வேளாளர் உறவின்முறைக்கு பாத்தியப்பட்ட இடத்தில் வ உ சி கலையரங்கம் அமைக்க வேண்டும் என பல ஆண்டு தீர்மானத்தை நிறைவேற்றும் வகையில் கட்டுமான பணி வேளாளர் உறவின்முறை சார்பில் தொடங்கப்பட்டுள்ளது.

அதற்கு நன்கொடை கொடுத்து உதவுமாறு முன்னாள் அமைச்சர் கே. டி. ராஜேந்திர பாலாஜியிடம் வேளாளர் உறவின் முறை சார்பில் கோரிக்கை விடப்பட்டது. அதனை ஏற்று கலையரங்கம் அமைக்க ரூபாய் ஒரு லட்சம் நன்கொடை வழங்கி வ. உ. சி. கலையரங்கம் கட்டுமானப் பணியை சிறப்பாக செய்யுமாறு கேட்டுக் கொண்டார். நன்கொடை வழங்கிய விருதுநகர் அதிமுக மேற்கு மாவட்ட கழக செயலாளருமானமுன்னாள் அமைச்சர் மன கே டி ராஜேந்திர பாலாஜிக்கு வேளாளர் உறவின் முறை சார்பில் நன்றி கூறப்பட்டது.


