

மும்பையில் இருந்து நியூயார்க்கிற்கு வானில் பறந்து கொண்டிருந்த ஏர் இந்தியா விமானம் வெடிகுண்டு மிரட்டலால் தரையிறக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மகாராஷ்டிரா மாநிலம், மும்பை விமான நிலையத்தில் இருந்து நேற்று நள்ளிரவு 1.43 மணிக்கு நியூயார்க்கிற்கு ஏர் இந்தியா விமானம் புறப்பட்டுச் சென்றது.
விமான ஊழியர்கள் உள்பட 322 பயணிகளுடன் அந்த விமானம் வானில் பறந்து கொண்டிருந்தது. அப்போது, விமானத்தின் கழிவறையில் வெடிகுண்டு மிரட்டல் கடிதம் இருந்ததை விமானப் பணிப்பெண் பார்த்து அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து உடனடியாக அவர் விமானிகளிடம் தெரிவித்தார். இதையடுத்து பாதுகாப்பு படைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதையடுத்து மும்பை சத்ரபதி சிவாஜி மகாராஷ் விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது.
பிறகு விமானம் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டது. வெடிகுண்டு சோதனை நிபுணர்கள் குழு அந்த விமானத்தை முழுவதும் சோதனை செய்தது.ஆனால், அந்த விமானத்தில் வெடிபொருள் எதுவும் கிடைக்கவில்லை., கடந்த ஐந்து மாதங்களில் ஏர இந்தியா விமானத்திற்கு இரண்டாவது முறையாக தற்போது வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது.
இந்த விவகாரம் தொடர்பாக மிரட்டல் விடுத்த அடையாளம் தெரியாத நபர் மீது சஹார் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.இந்த சம்பவம் மும்பையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

