31 வயது மதிக்கத்தக்க இளைஞர் நீரில் மூழ்கிய சம்பவத்தால் ஒட்டுமொத்த கிராமமே சோகத்தில் மூழ்கியுள்ளது.
பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் வட்டம் இரூர் கிராமத்தைச் சேர்ந்த பரமானந்தம் மகன் விக்னேஸ்வரன் வயது 31 என்பவர் இரூர் ஏரியில் குளிக்க சென்று நீரில் மூழ்கியுள்ளார். அக்கம்பக்கத்தினர் உடனே பெரம்பலூர் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். உடனே உதவி மாவட்ட அலுவலர் வீரபாகு தலைமையிலான குழுவினர் விரைந்து வந்த பெரம்பலூர் போக்குவரத்து நிலைய அலுவலர் பழனிசாமி மற்றும் முன்னணி தீயணைப்பாளர் இன்பரசன், பா.சரண்சிங், மாதேஷ், பால்ராஜ், சரவணன், ஸ்ரீதர் மற்றும் மணிமாறன், மனோஜ் ஆகியோர் நீரில் மூழ்கியவரை தீவிரமாக தேடினர். மூன்று மணி நேரம் கழித்து நீரில் மூழ்கிய இளைஞரை சடலமாக மீட்டு காவல்துறையிடம் ஒப்படைத்தனர். இந்த சம்பவத்தால் ஒட்டுமொத்த கிராமமே சோகத்தில் மூழ்கியுள்ளது.
