• Wed. Sep 23rd, 2026
WhatsAppImage2026-09-17at2324521
previous arrow
next arrow
Read Now

அ.இ.அ.தி.மு. கழகம் சார்பாக இரத்ததான முகாம்..,

ByK Kaliraj

May 10, 2025

அதிமுக பொதுச்செயலாளரும் முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடியார் அவர்களின்… 71வது பிறந்த தினத்தினை முன்னிட்டு, விருதுநகர் மேற்கு மாவட்ட அஇஅதிமுகழகம் மற்றும் விருதுநகர் சட்டமன்ற தொகுதி கழகம் சார்பாக மாபெரும் இரத்ததான மற்றும் பொது மருத்துவமுகாம். விருதுநகர் முனிசிபல் ஆபிஸ் பின்புறம் உள்ள SST திருமண மஹாலில் நடைபெற்றது.

மாபெரும் இரத்ததான மற்றும் பொது மருத்துவ முகாமினை கழகஅமைப்பு செயலாளரும் முன்னாள் அமைச்சர் விருதுநகர் மேற்கு மாவட்ட கழக செயலாளர் கே .டி. ராஜேந்திர பாலாஜி தலைமை தாங்கி முகாமினை தொடங்கி வைத்தார்.

கழக சிறுபான்மை நலப்பிரிவு பொருளாளர், முன்னாள் வாரிய தலைவர் ஜான் மகேந்திரன். அவைத்தலைவர் விஜயகுமாரன். விருதுநகர் மாவட்ட, விருதுநகர் சட்டமன்ற தொகுதியை சார்ந்த, நகர, ஒன்றிய,வார்டு ஊராட்சி கழக நிர்வாகிகளும் பெருந்திரளாக கலந்து கொண்டனர்.