• Wed. Apr 24th, 2024

மேகாலயா, திரிபுரா பாஜக வெற்றி பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கி கொண்டாட்டம்

நீலகிரி மாவட்ட பாஜக சார்பில் மேகாலயா, திரிபுரா மாநிலங்களில் நடைபெற்ற தேர்தலில் பாஜக வெற்றி பெற்றுள்ளதையடுத்துபட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கி கொண்டாட்டம்..
திரிபுரா, மேகாலயா, நாகாலாந்து ஆகிய 3 மாநிலங்களில் உள்ள சட்டசபைகளுக்கு கடந்த ஜனவரி மாதம் 18ம் தேதி தேர்தல் அறிவிக்கப்பட்டது. திரிபுராவில் 60 சட்டசபை தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக கடந்த 16ம் தேதி தேர்தல் நடந்தது. அங்கு 90 சதவீத வாக்குகள் பதிவாகின. இதேபோல் 60 தொகுதிகளை கொண்ட மேகாலயா, நாகாலாந்து மாநில சட்டப் பேரவைகளுக்கும் ஒரே கட்டமாக 27ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. மேகாலயாவில் 85 சதவீதமும், நாகாலாந்தில் 84 சதவீதமும் வாக்குகள் பதிவாகின. திரிபுரா, மேகாலயா, நாகாலாந்து ஆகிய 3 மாநிலங்களிலும் இன்று வாக்கு எண்ணிக்கை காலை 8 மணிக்கு தொடங்கி நடைபெற்றது. திரிபுரா திரிபுராவில் பாஜக கூட்டணி 33 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. சிபிஎம் கட்சி 14 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. டிஎம்பி கட்சி 13 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. மொத்தமுள்ள 60 தொகுதிகளில் ஆட்சியமைக்க 31 இடங்களே போதுமான சூழலில் பாஜக கூட்டணி 33 இடங்களை பெற்றுள்ளது.

இதன்மூலம் திரிபுராவில் மீண்டும் பாஜக ஆட்சி அமைகிறது. திரிபுராவின் தற்போதைய முதல்-மந்திரியாக மானிக் சாஹா பர்தோவாலி தொகுதியில் வெற்றி பெற்றுள்ளார். நாகாலாந்து நாகாலாந்தில் எண்டிபிபி-பாஜக கூட்டணி 37 இடங்களை கைப்பற்றியுள்ளது. மற்ற கட்சிகள் 23 இடங்களை கைப்பற்றியுள்ளனர். மொத்தமுள்ள 60 தொகுதிகளில் ஆட்சியமைக்க 31 இடங்கள் போதும் என்ற சூழலில் 37 இடங்களை பெற்றுள்ள என்டிபிபி-பாஜக கூட்டணி ஆட்சி அமைக்க இருக்கிறது. நாகாலந்தின் தற்போதைய முதல்-மந்திரி ரியோ அங்காமி 2 தொகுதியில் வெற்றி பெற்றுள்ளார். மேகாலயா மேகாலயாவில் என்பிபி கட்சி 26 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. ஐக்கிய ஜனநாயக கட்சி 21 இடங்களிலும் பாஜக 2 இடங்களிலும் திரிணாமுல் காங்கிரஸ் 5 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன. மற்ற கட்சிகள், சுயேட்சைகள் 10 இடங்களில் வெற்றி பெற்றுள்ளனர். இங்கு யாருக்கும் பெரும்பான்மைக்கு கிடைக்கவில்லை. அதனால் இங்கு கூட்டணி ஆட்சி அமைய வாய்ப்புள்ளது.
இதனை தொடர்ந்து இந்த வெற்றியை கொண்டாடும் வகையில நீலகிரி மாவட்ட பாஜக சார்பில் மாவட்ட தலைவர் மோகன்ராஜ் முன்னிலையில் மாவட்ட நிர்வாகிகள் நகர நிர்வாகிகள் அணி பிரிவு நிர்வாகிகள் கட்சித் தொண்டர்கள் என அனைவரும் கலந்து கொண்டு பட்டாசு வெடித்தும், பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கியும் வெற்றியை கொண்டாடினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *