• Mon. Apr 29th, 2024

2 மாநிலமாக பிரித்து தமிழகத்தை கைப்பற்ற பாஜக புதியதிட்டம்

ByA.Tamilselvan

Jun 25, 2022

தமிழகம் 2 மாநிலமாக பிரிக்கப்படுமா என பரபரப்பு தகவல் வெளியாகியிருக்கிறது.
2024-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடக்கிறது. இந்த தேர்தலுக்கு பிறகு இந்தியாவில் மாநிலங்களின் எண்ணிக்கை 50 ஆக உயர்த்தப்படுகிறது.
அதன்படி, மகாராஷ்டிராவில் புதிதாக 3 மாநிலங்கள், கர்நாடகத்தில் 2, உத்தரபிரதேசத்தில் 4 என, நாடு முழுவதும் உள்ள மாநிலங்கள் பிரிக்கப்பட இருக்கின்றன.
இதுகுறித்து பிரதமர் மோடி ஆலோசனை நடத்தி வருகிறார்” என்று, கர்நாடக பொது விநியோகம், உணவு மற்றும் வனத்துறை அமைச்சர் உமேஷ் கட்டி பெலகாவியில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.இது மட்டும் நடந்தால், கண்டிப்பாக தமிழகத்தை இரண்டாக பிரித்து கொங்கு மண்டலம் தனி மாநிலமாக உருவாகும் என்று கூறப்படுகிறது.இதன்மூலம், கொங்கு மண்டலத்தில் ஏற்கனவே இருக்கும் செல்வாக்கை மேலும் அதிகரித்து, ஆட்சியமைக்க பாஜக இப்படி ஒரு முடிவை எடுக்கலாம் என்று அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.
கடந்த சிலஆண்டுகளுக்கு முன்னாள் பாமக ராமதாஸ் தமிழகத்தை 2 பிரிக்கும் யோசனையை முன்வைத்தார். தமிழக மக்களின் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். தற்போது பாஜக தனது வெற்றிக்காக தமிழக்தை 2 பிரிக்கும் திட்டம் தீட்டியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *