• Thu. Aug 20th, 2026
WhatsAppImage2026-08-13at1759153
previous arrow
next arrow
Read Now

27-ந்தேதி காங்கிரஸ் போராட்டம்: கே.எஸ்.அழகிரி அறிவிப்பு

ByA.Tamilselvan

Jun 25, 2022

தமிழகம் முழவதும் அக்னிபாத் திட்டத்திற்கு எதிராக காங்கிரஸ் வரும் 27ம் தேதி போராட்டம்
தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி விடுத்துள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:- இளைஞர்களின் வேலைவாய்ப்புக்கு உத்தரவாதம் தராத, எதிர்காலத்தை கேள்விக்குறியாக்குகிற அக்னிபாத் திட்டத்தை எதிர்த்து நாடு முழுவதும் போராட்டம் நடத்த வேண்டுமென்று தலைவர் ராகுல்காந்தியும், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியும் அறைகூவல் விடுத்திருக்கிறது. இதனடிப்படையில் தமிழகத்தில் உள்ள அனைத்து சட்டமன்றத் தொகுதிகளிலும் அக்னிபாத் திட்டத்திற்கு எதிராக வருகிற 27-ந்தேதி திங்கட்கிழமை கண்டன ஆர்ப்பாட்டத்தை மாவட்ட காங்கிரஸ் கமிட்டிகள் ஏற்பாடு செய்ய வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன். ஆண்டுக்கு 2 கோடி பேருக்கு வேலைவாய்ப்பு கொடுப்பேன் என்று ஆட்சிக்கு வந்து எட்டு ஆண்டுகளில் 45 ஆண்டுகளில் இல்லாத வேலை இல்லா திண்டாட்டம் தலைவிரித்தாடி வருகிறது. இந்நிலையில் இளைஞர்களின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்குகிற அக்னிபாத் திட்டத்தை திரும்பப் பெற வேண்டுமென்ற கோரிக்கையை முன்வைத்து தமிழ்நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சி நடத்துகிற போராட்டம் மத்திய பா.ஜ.க. அரசுக்கு எச்சரிக்கையாக அமைய வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.