மதுரையில் பாஜக மகளிர் அணி சார்பில் திமுக அரசின் கள்ளச்சாராய மரணங்களை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது . மதுரை மாநகர் மாவட்ட மகளிர் அணி தலைவர் மீனா இசக்கி முத்து தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் திமுக அரசு கள்ளச்சாராய மரணங்களை தடுத்து நிறுத்த வேண்டும். கள்ளச்சாராய வியாபாரிகள் மீது குண்டர் சட்டம் போன்ற கடுமையான சட்டங்களால் நடவடிக்கை எடுக்க வேண்டும். கள்ளச்சாராய மரணங்களுக்கு அரசு பணத்தை வாரி வழங்கக் கூடாது. கள்ளச்சாராயம் காய்ச்சுவோருக்குஉடந்தையாக செயல்பட்ட காவல்துறை அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும். கள்ளச்சாராய மரணங்களால் பாதிக்கப்பட்ட இளம் விதவைப் பெண்களின் வாழ்வாதாரம் பாதுகாக்கப்பட வேண்டும் என்பது போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டது .
ஆர்ப்பாட்டத்தில் மதுரை மாநகர் மாவட்ட பாஜக தலைவர் மகா சுசீந்திரன், பார்வையாளர் கார்த்திக் பிரபு , பொதுச் செயலாளர்கள் குமார், ராஜ்குமார், .துணை தலைவர்கள் வினோத்குமார்,ஜோதி மணிவண்ணன், செயலாளர்கள் ரமேஷ்கண்ணா, தனலட்சுமி , பூமா ஊடகப்பிரிவு தலைவர் ரவிச்சந்திர பாண்டியன், இளைஞர் அணி தலைவர் பாரிராஜா, மகளிரணி நிர்வாகிகள் செல்வி , ஜமுனா பாரதி ,திவ்யா , மணிமாலா, சித்ராதேவி, மண்டல் தலைவர்கள் முரளி , இசக்கிமுத்து, ஜெகநாதன் உள்பட ஏராளமான மாநில ,மாவட்ட . மண்டல் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.