மதுரை பாண்டி கோவில் பகுதியில் தேசிய நெடுஞ்சாலையில் சாகசம் செய்து சமூக வலைதளங்களில் வீடியோ வெளியிட்ட வாலிபருக்கு வலைவீச்சு
மதுரை மாவட்டத்தில் கடந்த சில தினங்களாகவே பொதுமக்கள் அதிகம் நடமாட்டம் உள்ள பகுதிகள் மற்றும் தேசிய நெடுஞ்சாலைகளில் வாலிபர்கள் விலை உயர்ந்த பைக்குகளில் சாகசம் செய்யும் சம்பவங்கள் என்பது அதிகரித்துள்ளது குறிப்பாக அவ்வாறு சாகசத்தில் ஈடுபட்டு அதனை வீடியோவாக சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டு வருகிறார்கள்.
இது தொடர்பாக ஏற்கனவே காவல்துறையினர் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில் எச்சரிக்கை மீறி மதுரை பாண்டி கோவில் பகுதியில் வாலிபர் ஒருவர் தேசிய நெடுஞ்சாலையில் சாகசம் செய்வது போன்ற வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் பரவி வருகிறது வண்டி எண் அடிப்படையாகக் கொண்டு வாலிபரை மாட்டுத்தாவணி காவல்துறை தேடி வருகிறார்கள்…