

நமது நாட்டின் மூவர்ணக்கொடியை பாஜக வருங்காலங்களில் மாற்றிவிடும் என மெகபூபா முப்தி குற்றம்சாட்டியுள்ளார்.
ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதல்வரும், மக்கள் ஜனநாயகக் கட்சி தலைவருமான மெகபூபா முப்தி இன்று செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் கூறியதாவது; “வரும் காலங்களில் நாட்டின் அடித்தளமாக உள்ள அரசியலமைப்பையும், மதச்சார்பின்மையையும் பாஜக அழித்துவிடும்.
நீங்கள் பெருமையுடன் ஏற்றும் மூவர்ணக் கொடியை மாற்றி பாஜக காவிக் கொடியை கொண்டு வருவார்கள். ஜம்மு-காஷ்மீர் அரசியலமைப்பு மற்றும் ஜம்மு-காஷ்மீர் கொடியை எடுத்துக் கொண்டது போல பாஜக இந்த நாட்டின் தேசிய கொடியையும் மாற்றிவிடுவார்கள்.ஆனால், நமது கொடியையும், நமது அரசியலமைப்பையும் திரும்பப் பெறுவோம் என நாம் சபதம் எடுத்துள்ளோம். லட்சக்கணக்கான மக்கள் தங்கள் உயிரை தியாகம் செய்த காஷ்மீர் பிரச்சினையை தீர்க்க பாஜகவுக்கு அழுத்தம் கொடுப்போம்” என்றார்.
