காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியா தலைமையில் ராகுல்காந்தி மற்றும் காங்கிரஸ் எம்.பி.க்கள் நாடாளுமன்றத்தில் போராட்டம் நடத்தினர்
விலைவாசி உயர்வு, வேலையில்லா திண்டாட்டம்,உணவுப்பொருள்களுக்கு ஜிஎஸ்டி வரிவிதிப்பு ஆகியவற்றுக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு தழுவிய அளவில் காங்கிரஸ் கட்சி இன்று போராட்டம் நடத்துகிறது.
இந்த போராட்டத்தின் ஒரு பகுதியாக நாடாளுமன்ற வளாகத்தில் ராகுல்காந்தி ,சோனியா காந்தி உள்ளிட்ட காங்கிரஸ் கட்சியின் எம்.பி.க்கள் நாடாளுமன்றத்தில் கருப்பு உடை அணிந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.