
பாஜக மாவட்ட தலைவர் கைது செய்யப்பட்டதை கண்டித்து கழுகுமலையில் பாஜகவினர் ஆர்ப்பாட்டம்.
கோவில்பட்டி சார்பதிவாளர் அலுவலகத்தில் நடக்கும் முறைகேடுகளை தட்டி கேட்ட பாஜக மாவட்ட தலைவர் வெங்கடேசன்சென்னகேசவன் உள்ளிட்ட பாஜகவினரை போலீசார் கைது செய்தனர். இதனை கண்டித்து தூத்துக்குடி மாவட்டம் கழுகுமலை மேலபஜார் பகுதியில் பாஜக கயத்தார் மேற்கு ஒன்றியம் சார்பில் ஒன்றிய தலைவர் ஜெகதீஷ் தலைமையில், மாநில பொதுகுழு உறுப்பினர் போஸ், மாவட்ட துணை தலைவர் இராஜேந்திரன் ஆகியோர் முன்னிலையில் பாஜகவினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
தொடர்ந்து திமுக அரசை கண்டித்தும், மாவட்ட தலைவரை விடுதலை செய்ய கோரியும் கோஷங்கள் எழுப்பினர். இதில் மாவட்ட நெசவாளர் பிரிவு செயலாளர் மாரியப்பன், ஒன்றிய பொதுசெயலாளர் சதீஷ்குமார், ஒன்றிய துணை தலைவர்கள் மதிஇராஜசேகரன், முத்துராமலிங்கம், கூட்டுறவு பிரிவு ஒன்றிய தலைவர் மாடசாமி, தகவல் பிரிவு விஜயபழனி, இளைஞரணி மாவட்ட செயலாளர் பிரபு, ஒன்றிய பொருளாளர் சரவணபாபு, இளைஞரணி பால கணேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
