• Fri. Mar 29th, 2024

பாஜக மதவாத கட்சி இல்லை! – அண்ணாமலை பேச்சு.

Byகுமார்

Feb 10, 2022

பாஜக மதவாத கட்சி இல்லை. எங்களுக்கு முருகனும் வேண்டும் அல்லாவும் வேண்டும் இயேசுவும் வேண்டும் என மதுரை வேட்பாளர் அறிமுக கூட்டத்தில் பாஜகவின் தமிழக தலைவர் அண்ணாமலை பேச்சு.

மதுரையில் பாஜக சார்பாக மாநகராட்சி, பேரூராட்சியில் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் அறிமுக கூட்டம் மதுரை பழங்காநத்தம் சந்திப்பில் பாஜக மாநகர் மாவட்ட தலைவர் டாக்டர் சரவணன் தலைமையில் நடைபெற்றது. இதில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பங்கேற்று வேட்பாளர்களை அறிமுகம் செய்து மதுரைக்கான தேர்தல் அறிக்கையை மதுரை மாநகர தலைவர் டாக்டர் சரவணன் வழங்க அதனை வெளியிட்டார்.

பின் மேடையில் பேசிய பாஜக தலைவர் அண்ணாமலை:

8 மாத கால திமுகவின் ஆட்சி 80 ஆண்டு காலம் ஆட்சி செய்தது போல மக்களுக்கு சலிப்பை கொடுத்துள்ளது. திமுக அரசு தேர்தலின் போது 518 வாக்குறுதிகள் வழங்கியது ஆனால் அதில்
7 வாக்குறுதியை கூட நிறைவேற்றவில்லை.

திமுக அரசு வெஜ் , நான் வெஜ் பொங்கல் தொகுப்பு வழங்கியது. பொங்கல் தொகுப்பில்  பாம்பு, பல்லி என பல விஷப் பூச்சிக்கள் இருந்தது.
பொங்கல் தொகுப்புக்கான
கரும்பு விவசாயிகளிடம் இருந்து  25 ரூபாய்க்கு என 
மொத்தமாக 2 கோடி15 லட்சம் வாங்கி. அதனை ரேசன் கடைக்கு கரும்பு 40 ரூபாய்க்கு விற்பனை செய்தவர்கள் திமுக மாவட்ட செயலாளர்கள்.
கரும்பில் மட்டும் திமுக அரசு 33 கோடி கமிசன் அடித்துள்ளது. மஞ்சள் பை ஒன்று  60 ரூபாய்க்கு வாங்கி தமிழ்நாடு அரசு
கின்னஸ் சாதனை செய்து உள்ளது. பொங்கல் தொகுப்பின் விலையைவிட மஞ்சள் பை விலைதான் அதிகம். 73% பேருக்கு கூட்டுறவு நகை கடன் தள்ளுபடி செய்ய முடியாது என அரசு அறிவித்துள்ளது.
நீட் தேர்வுக்கு விலக்கு கோரி 12 மாநில முதல்வர் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதினார். எந்த முதல்வரும் பதில்  கடிதம் எழுதவில்லை உங்கள் மானம் போகிறது. நம் மானத்தையும் ஏன் சேர்த்து வாங்குகிறீகள் என கேள்வி எழுப்பினார்.
இந்தியா முழுவதும் உள்ள  37 தலைவர்களுக்கு சமூக நீதி கூட்டமைப்பு தொடர்பாக கடிதம் எழுதினார். துணை பிரதமராக மாற வேண்டும் என ஸ்டாலின் ஆசைபடுகிறார்.
மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. தற்போது 50 மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. மேலும் 22 ஆயிரம் பேருக்கு நேரடியாக வேலை வாய்ப்பு கிடைக்கும். கொரோனாவில் 30 கோடி பேர் இறப்பார்கள் என காங்கிரஸ் கட்சியின்  ராகுல் காந்தி கூறிவிட்டி நைஸாக இத்தாலி சென்றார்.
நீட் தேர்வை கொண்டுவந்தது காங்கிரஸ், திமுக தான் அதனை நடைமுறைப்படுத்தியது தான் பாஜக.

*இந்தியைத் திணித்தால் பாஜக எதிர்ப்போம் இந்தியைத் திணித்தது காங்கிரஸ் தான் நாள்தோறும் காலை முதல் இரவு வரை திமுகவினர் மோடியை பற்றியும் பாஜக பற்றியும் பொய் பேசி வருகின்றனர்.
நீங்கள் முழித்துக் கொண்டு விட்டீர்கள் அதனால்தான் திமுகவிற்கு ஆட்சி பயம் வந்துவிட்டது.

பாஜக மதவாத கட்சி, இந்துக்களுக்கான கட்சியினர் கூறி வருகின்றனர் ஆனால் பாஜக சார்பாக முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள், திருநங்கைகள் வேட்பாளராக களமிறங்கி  உள்ளோம. எங்களுக்கு மதம், பாலின பாகுபாடு கிடையாது.
எங்களுக்கு
முருகனும் வேண்டும் அல்லாவும் வேண்டும் இயேசுவும் வேண்டும்… மதத்தை வைத்து அரசியல் செய்வது நாங்கள் இல்லை.

*தமிழகத்தில் பாஜக ஒருபோதும் ஆட்சிக்கு வராது என ராகுல் சொன்னார். அதை கேட்டவுடன்  நான் லட்டு வாங்கி வர கட்சியினரிடம் சொன்னேன்.
ராகுல் காந்தி குஜராத் முதல்வராக மோடி வரமாட்டார் என்று கூறிய பொழுது முதல்வரானார், பிரதமர் ஆக மாட்டார் என்று கூறிய பொழுது பிரதமரானார்.
ராகுல் காந்தி சொன்னாலே  அவர்களுக்கு சுக்கிரன் திசை  அதிகமாகும். அவர் சொன்ன மறுநாளே இராமநாதபுரம் கமுதி 14 வார்டில் போட்டியின்றி பாஜக தேர்வானது. அதற்கு மறுநாள் நாகர்கோவிலில் 2 வார்டுகள் என பாஜக போட்டியின்றி வென்றனர் என்று பேசினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *