• Fri. Mar 29th, 2024

சதுரங்கவேட்டை பட பாணியில் கிரிப்டோ கரன்சி பெயரில்  மோசடி!

Byகுமார்

Feb 10, 2022

சதுரங்கவேட்டை பட பாணியில் கிரிப்டோ கரன்சி என்ற பெயரில் கோடிக்கணக்கில்  மோசடியில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி புகார்.

மதுரை முனிச்சாலை பகுதியை சேர்ந்த பாண்டிக்கருப்பன். ஓய்வுபெற்ற பொதுப்பணித்துறை அதிகாரியான இவரின் மனைவி கோமதி சேலை விற்பனை சுயதொழில் செய்துவந்துள்ளார்.

இந்நிலையில் மதுரை அய்யர்பங்களா பகுதியை சேர்ந்த பாண்டித்துரை என்ற குடும்ப நண்பர் கோமதியிடம் கிரிப்டோ கரன்சியில் முதலீடு செய்தால் நல்லா லாபம் கிடைக்கும் என கூறியதோடு கோயம்புத்தூர் பகுதியை சேர்ந்த ஆறுமுகம் மற்றும் ரெஜினாகுமாரி ஆகிய இருவரை அறிமுகப்படுத்தி வைத்துள்ளார்.

இதனையடுத்து இருவரும் கோமதி மற்றும் அவரது கணவரிடம் பேசி பிட்காயினில் 8ஆயிரம் ரூபாய் முதலீடு செய்வதோடு, பல்வேறு முதலீடு செய்யும் நபர்களை உறுப்பினர்களாக இணைத்துவிட்டால் சில மாதங்களில் பல லட்சம் லாபம் ஈட்டுவதோடு பி.எம்.டபிள்யூ கார் போன்ற ஆடம்பர கார்கள் கிடைக்கும் என ஆசைவார்த்தை கூறியுள்ளனர்.

இதனையடுத்து மதுரை காளவாசல் பகுதியில் உள்ள பிரபல தங்குவிடுதியில் கிரிப்டோ கரன்சி நிறுவனத்தின் தலைவர் கந்தசாமி என்பவர் வருவதாக கூறி கோமதியையும் கோமதி சேர்த்துவிட்ட உறுப்பினர்களையும் அழைத்துவரக்கூறி அங்கு நடைபெற்ற பிரமாண்ட நிகழ்ச்சியில் 200பேர் கலந்துகொண்ட நிலையில் உறுப்பினர்கள் தலா 4ஆயிரம் ரூபாயை செலுத்திவிட்டு ஐடியை வாங்கிகொள்ளுமாறு கூறியுள்ளனர்.

மேலும் கோமதியை தனியாக சந்தித்து நீங்கள் முதல் உறுப்பினராக இணைந்துள்ளதால் 5லட்சம் ரூபாய்  செலுத்தினால் உடனடியாக அதற்குரிய கிரிப்டோ கரன்சியை பெற்றுகொள்ளுமாறு கூறியுள்ளனர்.

இதனையடுத்து  ஆறுமுகம், கோவிந்தசாமி,ரெஜினா குமாரி ஆகிய மூவரும் இருந்த தங்குவிடுதிக்கு நேரில் சென்ற கோமதி மற்றும் அவரது கணவர் பாண்டிக்கருப்பன் ஆகிய இருவரும் 3.75லட்சம் ரூபாய் பணத்தை வழங்கியுள்ளனர். அப்போது கிரிப்டோ கரன்சி காயினை தருமாறு கேட்ட நிலையில் கிரிப்டோ கரன்சி நிறுவனதலைவர் கந்தசாமியிடம் தான் உள்ளது எனவும் 2நாளில் வீடுதேடி வந்த காயினை தருவதாகவும் கூறியுள்ளனர்

இதை தொடர்ந்து சில நாட்கள் ஆகியும் காயின் தராத நிலையில் தனது பணத்தையாவது திரும்ப தருமாறு கோமதி கேட்டநிலையில் பணம் தராமல் ஏமாற்றி மோசடியில் ஈடுபட்டுள்ளதோடு இதுபோன்று பல்வேறு பகுதிகளில் தாங்கள் ஏமாற்றிவருவதாகவும் கூறி மிட்டியுள்ளனர்.

இதனையடுத்து கிரிப்டோ கரன்சி என்ற பெயரில் பல கோடி ரூபாய் பணமோசடியில் ஈடுபட்டதாக கூறி் பாதிக்கப்பட்ட கோமதி மதுரை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.

இந்நிலையில் எந்த விசாரணையும் தொடங்காத நிலையில் மோசடியில் ஈடுபட்டதாக கூறப்படும் கிரிப்டோ்கரனசி நிறுவனத்தின் தலைவர் என்று கூறப்பட்ட கந்தசாமி மற்றும் அவரது நண்பர்கள் சிலர் கிரிப்டோ கரன்சி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதாக கூறி மதுரை மாட்டுத்தாவணி பகுதியில் உள்ள செய்தியாளர் அரங்கில் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது பாதிக்கப்பட்ட கோமதி மற்றும் அவருடன் வந்த சில பெண்கள் கந்தாசாமியை மடக்கி பணத்தை கேட்க முயன்றபோது திடிரென செய்தியாளர் சந்திப்பின் போதே அங்கிருந்து காவல்துறையினரின் முன்பாகவே அவசரவசரமாக காரில் ஏறிச்சென்றனர்.

இதனையடுத்து பாதிக்கப்பட்ட பெண்கள் காரை நோக்கி ஓடிச்சென்ற நிலையில் மின்னல் வேகத்தில் காரில் தப்பியோடினர்.

தமிழகத்தில் பல்வேறு பகுதிகளுக்கு அழைத்துசென்று அங்குள்ள ஆடம்பர தங்குவிடுதிகளில் தங்கவைத்து சதுரங்க வேட்டை திரைப்பட பாணியில் பல்வேறு நபர்களிடம் கோடிக்கணக்கில் ஏமாற்றி  மோசடி செய்த கும்பல் காவல்துறை முன்பாகவே தப்பியோடிய நிலையில் தாங்கள் சேர்த்துவைத்த பணத்தையும் இழந்ததோடு, உறுப்பினர்களிடமிருந்து கொடுத்த பணத்திற்கும் பதில் சொல்ல முடியாமல் அதே இடத்தில் நின்றபடி கண்ணீர் விட்டு அழுத கோமதியை பார்த்தபோது பரிதாபமாக இருந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *