• Wed. Sep 2nd, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

சென்னையில் பாஜக கொடிகள், தொப்பிகள் பறிமுதல்

Byவிஷா

Mar 25, 2024

மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், சென்னையில் அதிரடி வாகன சோதனையின் போது, லாரிகளில் மூட்டை மூட்டையாக பாஜக கொடிகள் மற்றும் தொப்பிகள் பறிமுதல் செய்யப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
வில்லிவாக்கத்தில் தேர்தல் பறக்கும் படையினர் அதிரடி வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த லாரியை மடக்கி பிடித்து சோதனை செய்ததில் உரிய ஆவணங்கள் இன்றி 500க்கும் மேற்பட்ட மூட்டைகளில் கொண்டு வரப்பட்ட பாஜக கொடி மற்றும் தொப்பிகளை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு உள்ளனர்.