• Wed. Sep 2nd, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

பாஜகவில் 37 எம்பிக்களுக்கு வாய்ப்பு மறுப்பு

Byவிஷா

Mar 25, 2024

பாஜகவில் ஐந்தாம்கட்ட வேட்பாளர் பட்டியல் நேற்று அறிவித்துள்ள நிலையில், 37 எம்பிக்களுக்கு மீண்டும் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளதால் அக்கட்சியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பாஜகவின் ஐந்தாம் கட்ட வேட்பாளர் பட்டியலில் 37 எம்பிக்களுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது. 111 தொகுதிகளுக்கு பாஜக நேற்று வேட்பாளர்களை அறிவித்தது. அதில் மத்திய அமைச்சர்கள் அஸ்வினி குமார் சௌபே, வி கே சிங் மற்றும் வருண் காந்தி உள்ளிட்ட 37 எம்பிக்களின் பெயர் இல்லை. அதேசமயம் திரை பிரபலங்கள் கங்கனா ரணாவத், அருண் கோவில் மற்றும் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளில் இருந்து சேர்ந்திருப்பவர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.