குஜராத் மாநிலத்தின் புதிய முதல்வராக பூபேந்திர படேல் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
குஜராத் மாநில முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்துள்ளார் 65 வயதான விஜய் ரூபானி. அடுத்த ஆண்டு குஜராத் மாநிலத்தில் தேர்தல் நடைபெற உள்ள சூழலில் அவரது ராஜினாமா முடிவு அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
குஜராத் மாநில தற்போதைய துணை முதல்வர் நித்தின் பட்டேல், விவசாய துறை அமைச்சர் RC Faldu, மத்திய அமைச்சர்கள் புருஷோத்தம் ரூபாலா, மன்ஷூக் மண்டாவியா மாதியானவர்களின் பெயர்கள் பரிசீலிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில், குஜராத் மாநிலத்தின் புதிய முதல்வராக பூபேந்திர படேல் தேர்வு செய்யப்பட்டுள்ளார.
நாளை புதிய அரசு பதவி ஏற்கும் என பாரதிய ஜனதா கட்சித் தரப்பில் தகவல் வெளியாகியுள்ளது.
குஜராத்தின் புதிய முதல்வரை அறிவித்த பாஜக
