• Sat. Sep 26th, 2026
WhatsAppImage2026-09-24at2158321
previous arrow
next arrow
Read Now

காங்கிரஸ் கமிட்டி சார்பில் நடிகர் திலகம் செவாலியர் சிவாஜி கணேசன் பிறந்த நாள் விழா..,

Byமுகமதி

Sep 26, 2026

26.9.2026.. தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மற்றும் புதுக்கோட்டை மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் நடிகர் திலகம் செவாலியர் சிவாஜி கணேசன் அவர்களின் 99 வது பிறந்த நாள் விழாவினை யொட்டி புதுக்கோட்டை மாவட்ட காங்கிரஸ் கமிட்டி அலுவலகத்தில் பள்ளி மாணவ மாணவிகளுக்கு சிவாஜி கணேசன் அவர்களின் பிறந்த நாள் விழா பேச்சுப் போட்டி மாவட்ட காங்கிரஸ் கமிட்டி வடக்கு தலைவர் பெனட் அந்தோணி ராஜ் அவர்களின் தலைமையில் தேசியமும் சிவாஜி கணேசனும், பெருந்தலைவர் காமராஜரின் தொண்டராக சிவாஜி கணேசன், திரையில் தமிழ் வளர்த்த சிவாஜி கணேசன் , திரையில் சிவாஜி கணேசன் அவர்களின் தேசப்பற்று என்ற தலைப்புகளில் பேச்சு போட்டிகள் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினரும் புதுக்கோட்டை நகராட்சி நகர்மன்ற தலைவர் துரை. திவியநாதன் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ராமசுப்புராம் மாநில பொதுக்குழு உறுப்பினர் சந்திரசேகரன் மாவட்ட கலைப் பிரிவு தலைவர் மேப் வீரையா மாவட்ட துணை தலைவர்கள் ஆலங்குடி தமிழ்ச் செல்வன் வழக்கறிஞர் ராதாகிருஷ்ணன் வேங்கை அருணாசலம். வீ.. தமிழ்ச் செல்வன் மாநகர தலைவர் மதன் கண்ணன் ஒன்றிய தலைவர் சூர்யா பழனியப்பன் தங்கசிவா கந்தர்வகோட்டை ராமையா செம்பை மணி குன்றாண்டார்கோவில் சண்முகம் வீசா. இ. விஜி ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.

இதில் புதுக்கோட்டை மாவட்ட பள்ளிகளில் உள்ள மாணவ மாணவிகள் பங்கேற்றனர். மேற்கண்ட தலைப்புகளில் பேசிய மாணவர்கள் நடுவர்கள் தேர்ந்தெடுத்தனர். முதல் பரிசு பெற்ற ஸ்ரீ மாணிக்கம் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவி. ரா. பார்வதி க்கு பாராட்டி பாராட்டு சான்றிதழ் மற்றும் ரொக்கம் ரூபாய் ஐந்தாயிரமும் இரண்டாம் பரிசு பெற்ற ஸ்ரீ மாணிக்கம் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவி பெ. ஜெயஸ்ரீ க்கு பாராட்டி பாராட்டு சான்றிதழ் மற்றும் ரொக்கம் ரூபாய் மூன்றாயிரம் மூன்றாம் பரிசு திருக்கோகர்ணம் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவி எஸ்.ஜெனிபர் க்கு பாராட்டி பாராட்டு சான்றிதழ் மற்றும் ரொக்கம் ரூபாய் இரண்டாயிரம் வழங்கியும் பொன்னாடை அணிவித்தும் கௌரவிக்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் கம்மங்காடு கருப்பையா பாஸ்கர் ராஜேந்திரன் நாச்சிமுத்து பெருங்களூர் கண்ணன் சகாய ராஜ் தகவல் உரிமை அணி தலைவர் மதன் சேகர் உள்பட ஏராளமான காங்கிரஸ் கட்சியினர் மற்றும் பள்ளி ஆசிரியர்கள் மாணவ மாணவியர் பங்கேற்றனர்.