
இஸ்லாமிய மக்களுக்கு பாதுகாப்பு அரணாக அதிமுக விளங்கி வருகிறது என முன்னாள் அமைச்சர் கே. டி. ராஜேந்திர பாலாஜி பேசினார்.
விருதுநகர் மேற்கு மாவட்டம் சிவகாசி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பராசக்தி காலனி அறிஞர் அண்ணா காலனி, தேவமார்தெரு, மருதுபாண்டி நகர், உள்ளிட்ட பகுதிகளில் பூத்து கமிட்டி கூட்டம் மண்டல கழகச் செயலாளர் கருப்புசாமி பாண்டியன் தலைமையில் நடைபெற்றது. மேற்கு மாவட்ட பொது கமிட்டி பொறுப்பாளர் ஜான் மகேந்திரன் முன்னிலை வகித்தார். மாவட்ட வழக்கறிஞர் பிரிவு செயலாளர் முத்து பாண்டியன் வரவேற்றார்.
சிறப்பு அழைப்பாளராக மேற்கு மாவட்ட கழக செயலாளர் முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி கலந்து கொண்டு பேசியது.
திமுக தேர்தல் வாக்குறுதிகளில் இஸ்லாமியர்களுக்கான அறிவிக்கப்பட்ட சலுகைகள் வழங்கப்படவில்லை. எடப்பாடியார் கிறிஸ்தவர், முஸ்லிம், இந்து என அனைத்து மதத்தினரும் சமமாக நடத்தி வருகிறார்.
அதிமுகவின் மீது முஸ்லீம்கள் வைத்துள்ள நம்பிக்கைகள் வீண் போகாது. சிறுபான்மை சமுதாய மக்களுக்கு என்றும் பாதுகாப்பு காரணமாக அதிமுக விளங்கிவரும் மாற்று சமுதாயத்தை சேர்ந்தவர்களை உறவுமுறை வைத்து தான் அழைத்து வருகிறோம். குறிப்பாக இஸ்லாமிய மக்களை அப்பு சித்தப்பு என்ற முறையில் தான் அழைத்து வருகிறோம். இஸ்லாமியர்கள் எங்களின தொப்புள் கொடி உறவாகும்.
எம்ஜிஆர், ஜெயலலிதா வழியில் எடப்பாடி ஏறும் கொள்கை ரீதியில் முஸ்லிம் மக்கள் பாதிக்கப்பட்டால் ஆதரவான முதல் குரல் அதிமுகவாக இருக்கும். விருதுநகர் மாவட்டத்தில் முஸ்லிம்களுக்கு ஏதாவது பாதிப்பு என்றால் முதல் ஆளாக நான் இருப்பேன் என கே.டி. ராஜேந்திர பாலாஜி கூறினார்.
மற்ற கட்சியை சேர்ந்தவர்கள் முஸ்லிம்களை உறுப்பினர்களாகவே வைத்திருப்பார்கள். ஆனால் அதிமுகவில் இந்துக்களுக்கு இணையாக முஸ்லீம்களுக்கும் கட்சிப் பொறுப்புகள் வழங்கப்பட்டுள்ளன. பூத் ஏஜெண்டுகளுக்கும், முஸ்லிம்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது.
அதனால் சிவகாசி சட்டமன்ற தொகுதியில் இந்த முறை முஸ்லிம் ஓட்டுக்கள் சிந்தாமல், சிதறாமல் முழுமையாக அதிமுகவுக்கு வழங்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
