• Thu. Jul 17th, 2025
WhatsApp Image 2025-07-12 at 10.04.57 PM
WhatsApp Image 2025-07-12 at 10.04.58 PM
WhatsApp Image 2025-07-12 at 10.04.57 PM (1)
WhatsApp Image 2025-07-12 at 10.04.56 PM (1)
WhatsApp Image 2025-07-12 at 10.04.58 PM (1)
WhatsApp Image 2025-07-11 at 8.58.30 AM
WhatsApp Image 2025-07-11 at 8.58.31 AM
WhatsApp Image 2025-07-11 at 8.58.31 AM (1)
WhatsApp Image 2025-07-11 at 8.58.29 AM (2)
WhatsApp Image 2025-07-11 at 8.58.30 AM (2)
WhatsApp Image 2025-07-11 at 8.58.29 AM (1)
WhatsApp Image 2025-07-11 at 8.58.27 AM (2)
WhatsApp Image 2025-07-11 at 8.58.28 AM (1)
WhatsApp Image 2025-07-11 at 8.58.30 AM (1)
previous arrow
next arrow

இருசக்கர வாகனம் மீது வேன் மோதியதில் பாட்டி, பேரன் உயிரிழப்பு!

ByRadhakrishnan Thangaraj

May 18, 2025

இராஜபாளையம் புதிய பேருந்து நிலையம் அருகே இருசக்கர வாகனம் மீது வேன்
மோதியதில் பாட்டி, பேரன் உயிரிழந்தனர்.

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் அருகே வாழவந்தாள்புரம் அருகே மேல குன்னக்குடி பகுதியைச் சேர்ந்த வைரமுத்து (வயசு 58), தன்னுடன் தனது மனைவி வீரலட்சுமி (வயது 55 ), பேரன் கமலேஷ் வயது 10. இவர்கள் மூன்று பேரும் இரு சக்கர வாகனத்தில் ராஜபாளையத்தில் தனது உறவினர் வீட்டுக்கு வந்துவிட்டு, திரும்பி சென்று கொண்டிருந்த பொழுது, ஸ்ரீவில்லிபுத்தூரில் இருந்து சங்கரன்கோவில் நோக்கி சென்ற வேன் கோதை நாச்சியார்புரம் விலக்கில் பகுதியில் முன்னே சென்ற இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் வைரமுத்து தூக்கி வீசப்பட்டு பலத்த காயங்களுடன் உயிர் தப்பினார். சம்பவ இடத்திலேயே வீரலட்சுமி மற்றும் கமலேஷ் உயிரிழந்தனர்.

தகவல் அறிந்து வந்த இராஜபாளையம் தெற்கு போலீசார் விரைந்து சென்று பாட்டி வீரலட்சுமி ,பேரன் கமலேஷ் இருவரது உடலையும் இராஜபாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். படுகாயங்களுடன் துடித்துக் கொண்டிருந்த தாத்தா வைரமுத்து-வை இராஜபாளையம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.
இந்த விபத்து குறித்து வேனை ஓட்டி வந்த திருநெல்வேலி சேர்ந்த மாயப்பெருமாள் வயது 31 என்பவர் கைது செய்யப்பட்டார். இராஜபாளையம் தெற்கு காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு உள்ளனர்.