மாற்று கட்சியை சேர்ந்தவர்கள் முன்னாள் அமைச்சர் கே. டி. ராஜேந்திர பாலாஜி தலைமையில் அதிமுகவில் இணைந்தனர்.
விருதுநகர் மேற்கு மாவட்ட அதிமுக முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜியின் அணுகுமுறை மற்றும் செயல்பாடுகள் சிறப்பாக இருப்பதால் ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம், உள்ளிட்ட பகுதியில் சமீபத்தில் எந்த கட்சியிலும் சேராத புதிய தலைமுறையினர் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் அதிமுகவில் இணைந்துள்ளனர்.
அதனைத் தொடர்ந்து சிவகாசி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட சிவகாசி மேற்கு ஒன்றியம் நடுவப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த மாற்றுக் கட்சி இளைஞர்கள்,
கழக அமைப்புச் செயலாளர் விருதுநகர் மாவட்ட கழகச் செயலாளர் (மேற்கு),
முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி முன்னிலையில்
M.முத்துகிருஷ்ணன் திமுக கிளைத் துணைச் செயலாளர், பூத் பொறுப்பாளர்
முத்துகிருஷ்ணன், முன்னாள் ஒன்றிய இளைஞர் காங்கிரஸ் தலைவர் ஜெயராமன்,
திமுக கிளைச் செயலாளர் மணிகண்டன், திமுக கிளைத் துணைச் செயலாளர்
உள்பட 20 திமுக உறுப்பினர்கள் இணைந்துள்ளனர்.
தொடர்ந்து திமுக கட்சியின் மக்கள் விரோத போக்கு மீதும், ஆட்சியின் மீதும் ஏற்பட்ட வெறுப்பு காரணமாக ஏராளமானோர் அதிமுகவில் இணைந்து வருவதாக முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி தெரிவித்தார்.