• Tue. Nov 25th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

பரவை பேரூராட்சியில் பூமி பூஜை – முன்னாள் அமைச்சர்.

ByN.Ravi

Feb 28, 2024

மதுரை அருகே, பரவை பேரூராட்சி பகுதியில், ரூபாய் 35 லட்சம் மதிப்பீட்டில் பேருந்து நிழற்குடை அமைப்பதற்கான பூமி பூஜையானது, முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ எம்.எல்.ஏ. தலைமையில் நடைபெற்றது.
மதுரை மேற்கு தொகுதிக்குட்பட்ட பரவை பேரூராட்சி பகுதியில், ஊர் மெச்சிகுளம், அண்ணா நகர், பரவை காந்தி சிலை ஆகிய இடங்களில் பேருந்து நிழற்குடை அமைப்பதற்கான பூமி பூஜை விழா நடைபெற்றது. ஊர்மெச்சி குளத்தில், ரூபாய் 15 லட்சம் மதிப்பீட்டிலும், அண்ணா நகர் பகுதியில் 10 லட்சம் மதிப்பீட்டிலும், பரவை காந்தி சிலை பகுதியில் 10 லட்சம் மதிப்பீட்டிலும், மொத்தம் 35 லட்சம் மதிப்பீட்டில் மூன்று இடங்களில் பயணிகளுக்கான பேருந்து நிழற்குடை அமைப்பதற்கான பூமி பூஜை விழா நடைபெற்றது. இந்த விழாவில், முன்னாள் அமைச்சர் மதுரை மேற்கு சட்டமன்றத் தொகுதி எம்.எல்.ஏ.வுமான செல்லூர் கே. ராஜூ கலந்து கொண்டு, பூமி பூஜை பணிகளை தொடங்கி வைத்தார்.
இதில், பரவை பேரூராட்சித் தலைவர் கலா மீனா ராஜா, முன்னாள் தலைவர் சி. ராஜா மற்றும் பரவை பேரூராட்சி துணைத் தலைவர் வார்டு உறுப்பினர்கள் மற்றும் அதிமுகவினர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.