மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் கலைவாணர் நகரில் அமைந்துள்ள ஏ.எம்.எம். நர்சரி மற்றும் பிரைமரி பள்ளியில் ஆண்டு விழா நடைபெற்றது. இந்த விழாவில், பள்ளியின் தலைவர் விஜயன், செயலாளர் அன்பழகன், பொருளாளர் சிதம்பரநாதன், ஆலோசகர்கள் சேகர், ஜெயராமன், துணைத் தலைவர்கள் நல்லியப்பன், தயாளன் மற்றும் ரவி ஆகியோர் கலந்து கொண்டு கலை நிகழ்ச்சி மற்றும் பள்ளியில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கி வாழ்த்தினார். இந்த நிகழ்வில், ஆசிரியைகள் பள்ளியின் நிர்வாக குழு உறுப்பினர்கள் மற்றும் பெற்றோர்கள் கலந்து கொண்டனர். ஆண்டு விழாவையொட்டி, பள்ளி மாணவ, மாணவியர்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதற்கான ஏற்பாடுகளை, பள்ளி நிர்வாகிகள் மற்றும் ஆசிரியர்கள் செய்திருந்தனர்.