• Sun. May 5th, 2024

2028 இறுதிக்குள் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைப் பணிகள் முடிவுறும் – அமைச்சர் மா. சுப்பிரமணியன் மதுரையில் பேட்டி

Byகுமார்

Feb 28, 2024

ஜப்பான் சென்றிருந்த போது, 2024 இறுதிக்குள் மதுரை எய்ம்ஸ் கட்டடப் பணிகள் துவங்கி, படிப்படியாக நிதி விடுவிக்கப்பட்டு, 2028 இறுதிக்குள் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைப் பணிகள் முடிவுறும் எனச் சொல்லி இருக்கிறார்கள்

அமைச்சர் மா. சுப்பிரமணியன் மதுரையில் பேட்டி.

மருத்­து­வம் மற்­றும் மக்­கள் நல்­வாழ்­வுத் துறை சார்­பில் மது­ரை அ­ரசு இரா­ஜாஜி மருத்­து­வ­ம­னை­யில் 313 கோடியே 25 இலட்­சம் ரூபாய் செல­வில் கட்­டப்­பட்­டுள்ள 6 தளங்­கள் கொண்ட புதிய டவர் பிளாக் கட்­ட­டம் மற்­றும் நவீன மருத்­துவ உப­க­ர­ணங்­கள், 29 கோடி ரூபாய் செல­வில் அரசு இரா­ஜாஜி மருத்­து­வ­மனை, தோப்­பூர் அரசு காச­நோய் மருத்­து­வ­மனை, மதுரை அரசு மருத்­து­வக் கல்­லூரி, உசி­லம்­பட்டி அரசு மாவட்ட தலைமை மருத்­து­வ­மனை, சம­ய­நல்­லூர், சுகா­தா­ரம் மற்­றும் குடும்­ப­நல பயிற்சி மையம் மற்­றும் துணை செவி­லி­யர் பயிற்­சிப் பள்ளி ஆகிய இடங்­க­ளில் கட்­டப்­பட்­டுள்ள மருத்­து­வத் துறை கட்­ட­டங்­கள் ஆகிய திட்டப்பணிகளை முதல்வர் முக ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார் .

இந்த நிகழ்வில் மதுரை அரசு மருத்துவக் கல்லூரி கலையரங்கில் இருந்து மாண்புமிகு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் காணொளி காட்சி மூலம் நன்றி தெரிவித்தார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மா. சுப்ரமணியன் கூறுகையில்,

ஜப்பான் ஜைக்கா நிதி நிறுவன உதவியுடன் இது போன்ற கட்டடப் பணிகள் நடைபெறுகின்றன. மதுரை ராஜாஜி மருத்துவமனையில் இன்று திறக்கப்பட்ட கட்டடம் போன்று, கோவை மருத்துவக் கல்லூரி மற்றும் சென்னை KMC மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும் இது போன்று ஜைக்கா நிதி உதவியுடன் நடைபெற்று வரும் கட்டடப் பணிகள், இரண்டு மாதங்களில் நிறைவுற்று, பயன்பாட்டிற்கு வர இருக்கிறது.

ஜப்பான் சென்றிருந்த போது, ஜைக்கா நிதி நிறுவனத் துணைத் தலைவரிடம் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கும் உடனடியாக நிதியை விடுவிக்கச் சொன்னோம்.

நேற்றைக்கு முன் தினம், பாரதப் பிரதமரால் திறந்து வைக்கப்பட்ட ஐந்து எய்ம்ஸ் மருத்துவமனைகள் மத்திய அரசு நிதியுடன் கட்டப்பட்டவை.

ஜப்பான் சென்றிருந்த போது, 2024 இறுதிக்குள் மதுரை எய்ம்ஸ் கட்டடப் பணிகள் துவங்கி, படிப்படியாக நிதி விடுவிக்கப்பட்டு, 2028 இறுதிக்குள் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைப் பணிகள் முடிவுறும் எனச் சொல்லி இருக்கிறார்கள். ஒன்றிய அரசின் துறை அதிகாரிகள், ஜைக்கா நிறுவனத்திற்கு கொஞ்சம் அழுத்தம் கொடுத்திருந்தால் மதுரை எய்ம்ஸ் பணிகளை முன் கூட்டியே துவங்கி இருக்கலாம்.

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைப் பணிக்கு மார்ச் இறுதிக்குள் டெண்டர் உறுதி ஆகி விடும் எனச் சொல்லி இருக்கிறார்கள். அதற்கான Nodal officer ஐ நியமித்து இருக்கிறார்கள் என தனது பேட்டியில் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *