
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள வெம்பக் கோட்டை ஒன்றிய பாரதிய ஜனதா கட்சி சார்பில், சம கல்வி எங்கள் உரிமை அது கொடுப்பது அரசின் கடமை என வலியுறுத்தி கையெழுத்து இயக்கம் வெம்பக்கோட்டையில் நடைபெற்றது. மாவட்டத் தலைவர் சரவணா துரை என்ற ராஜா தலைமை வகித்தார்.

சட்டமன்ற பொறுப்பாளர் மாரி கண்ணன் முன்னிலை வகித்தார். வெம்பக்கோட்டை ஒன்றிய பொறுப்பாளர் மாரிச்செல்வம் கையெழுத்து இயக்கத்தை தொடங்கி வைத்து பேசினார்.

நிர்வாகிகள் சதீஷ்குமார், பொன்னுப்பாண்டி, உள்பட பாரதீய ஜனதா கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். சம கல்விக்கு ஆதரவு தெரிவித்து பொதுமக்களும் கையொப்பமிட்டனர்.

