• Sat. Mar 22nd, 2025

மும்மொழிக் கொள்கை கையெழுத்து இயக்கம்

சாத்தூர் அருகே மும்மொழிக் கொள்கைக்கு ஆதரவு கேட்டு பாஜக சார்பில் மாபெரும் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது.

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகிலுள்ள மேட்டமலை கிராமத்தில், விருதுநகர் மேற்கு மாவட்டம் பாஜக சார்பில், மேற்கு மாவட்டத் தலைவர் சரவணத்துரை ராஜா வழிகாட்டுதலின் படி, சாத்தூர் சட்டமன்றத் தொகுதியான, சாத்தூர் மேற்கு ஒன்றியத்தில் மண்டல தலைவர் ஜெய் கணேஷ் தலைமையில், மேட்டமலை கிராமத்தில் மும்மொழிக்கொள்கைக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் மாபெரும் கையெழுத்து நடைபெற்றது.

இந்நிகழ்வில் சிறப்பு அழைப்பாளராக மாவட்ட துணைத்தலைவர் ஒலிம்பிக் செல்வம் கலந்து கொண்டு கையெழுத்து இயக்கத்தை தொடங்கி வைத்தார். சாத்தூர் மேற்கு ஒன்றிய பொதுச்செயலாளர் கவியழகன் சிறப்பாக ஏற்பாடு செய்தார்.

பள்ளி மாணவர்கள் பெற்றோர்கள், தொழிலாளர்கள் பொதுமக்கள் என ஏராளமானோர் பங்கேற்றனர்.