• Thu. Mar 19th, 2026
WhatsAppImage2026-03-12at2345221
previous arrow
next arrow
Read Now

மேட்டுப்பாளையம் – உதகை இடையே
மீண்டும் மலைரயில் சேவை துவக்கம்

ரயில் பாதை சரியானதால், மேட்டுப்பாளையம் – உதகை மலை ரயில் சேவை இன்றுமுதல் மீண்டும் தொடங்கும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் கடந்த 13-ந் தேதி நள்ளிரவு பலத்த இடியுடன் கூடிய கனமழை பெய்தது. இதனால் கல்லாறு-ஹில்குரோவ் இடையே மலை ரயில் பாதையில் 10க்கும் மேற்பட்ட இடங்களில் மண் சரிவு ஏற்பட்டதுடன், தண்டவாளத்தில் ராட்சத பாறைகளும் விழுந்தன. ரயில் பாதையில் விழுந்துள்ள பாறை, மண்குவியலை அகற்றும் பணி தீவிரமாக நடைபெற்றது. இதனால் மலை ரயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே நிர்வாகம்
தெரிவித்திருந்தது. இந்த நிலையில் இந்த பணிகள் நிறைவு பெற்று ரயில் பாதை சரியானதால், மேட்டுப்பாளையம் – உதகை மலை ரயில் சேவை இன்றுமுதல் மீண்டும் தொடங்கும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.